பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் கணைக்கால் இரும்பொறை 373



என்பேனோ , நெய்தல் நிலமுடையனாதல் பற்றிச் சேர்ப்பன் என்பேனோ, மருதவயல்களையுடையனாதல் பற்றி ஊரன் என்பேனோ, யாங்கனம் மொழிகோ ஓங்குவாட் கோதையை[1]’ என்று பாடினர். வேறொருகால் புலவனொருவனை ஆற்றுப்படுக்கலுற்ற பொய்கையார், “எம் வேந்தனான கோதையிருக்கும் நகரம் தொண்டி; அது கானற் சோலையின் காட்சி மலிந்தது; கழியிடத்து மலர்ந்த பூக்களாலும் கோதை மார்பன் அணிந்த கோதையாலும் அத் தொண்டி தேன் மணம் கமழ்வது; அதுவே எமக்கு ஊர்; அவன் எமக்கு இறைவன்; அவன்பாற் செல்க[2]” என்று பாடியுள்ளார்.

மேலைக் கடற்கரையில் குறும்பர் நாடு வட்டத்தில் சிற்றூராய்ச் சுருங்கியிருக்கும் இவ்வூர், இன்றும் இக் காட்சியை நல்குவது இப் புறப்பாட்டின் பொய்யா வாய்மையைப் புலப்படுத்துகிறது.


  1. புறம். 48.
  2. புறம். 49.