சேரர்
சேரர் வரலாறு
சங்க கால இலக்கியங்களின் வாயிலாக அக்கால மக்களின் அக வாழ்க்கையையும், புற வாழ்க்கையையும் ஒருவாறு அறிய முடிகின்றது. அரசர், அரசியல், புலவர்கள், மக்கள், அரசு முறை, போர்முறை, கொடைத்தன்மை, பழக்கவழக்கங்கள், நாடு, எல்லைகள் ஆகியவற்றை உய்த்துணர முடிகின்றது.
சேரர் - சொல்லும் பொருளும்
இராமாயணகாலத்தில் சீதையைத் தேடிச்சென்ற வானரவீரர்களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும்போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறாள். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார். கிரேக்கத் தூதராள மெகஸ்தனீஸ் என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார்.
திருஞான சம்பந்தரும் தமது பதிகங்களில் சேரர், சேரலர் என்னும் சொற்களைப் பயன் படுத்துகிறார். இவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டாகும். இதனை நோக்கும்போது சேரர்,சேரர் என்னும் சொற்களே வழக்கில் வந்தனவாகும்.
அசோகனது கல்வெட்டுகளை நாம் நோக்கும்போது, சோல புத்திரர் என்பதைக் கேரள புத்திரர் என்றே வடமொழி அறிஞர்கள் படித்து வந்துள்ளனர். கல்வெட்டில் உள்ள பிராமிய எழுத்துக்கள் சேரலபுத்திரர் என்று படிக்கும் வண்ணமும் உள்ளது. அதைப் படித்த அறிஞர்கள் கேரளபுத்திரர் என்றே படித்து வந்ததனால், பிற்கால அறிஞர்களும் கேரள புத்திரர் என்றே கூறிவந்தனர்.
இதனால் நாம் அறிவதாவது: சேரலர் தம்மைக் கோளரென வழங்கத் தலைப்பட்டகாலமானது, தமிழ்மொழியானது சிதைந்து மலையாளமாக மாறிய காலமாயிருக்கலாம். கேரளர் என்னும் சொல்லானது கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்தான் மாறிற்று என்று உரைக்கத்தக்க வகையில், கி.பி. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பிற்காலச் சோழன்