பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சேற்றில் மனிதர்கள் "அப்பிடி இருந்தாத்தா சனங்க வாரங்க.." "நெல்லால்ல. சாமி படம், ஆதிபராசக்தி நெல்லாருந்திச்சி, திருவிளையாடல் நெல்லாருந்திச்சி.” அவர்கள் விரைந்து நடக்கிறார்கள். இவள் அவர்களுக்கு ஈடுகொடுக்க ஒடவேண்டி இருக்கிறது. பின்னே ரிக்சாக்கள். லாரி வெளிச்சம் விழும்போது, கார் தன்னைத் துரத்தி வருவதாகக் கிலி பிடித்து நா ஒட்டிக்கொள்ள வீழலில் ஒதுங்குகிறாள்; ஒடுகிறாள். "என்னாங்க...? ஒங்களுக்கு வெவசாய சங்க ஆபீசு எங்க இருக்குன்னு தெரியுமா?...” அந்த ஆள் திரும்பிப் பார்க்கிறான். "ஆரும்மா நீ?.” "இல்லிங்க... வந்து. பஸ்ஸுக்கு நானும் எங்கண்ணனும் வந்தம், அவரு பஸ்ஸுல என்ன உக்காத்தி வச்சிட்டு எதுக்க கடய்க்கு போயிட்டு இதா வந்திடறேன்னு போனாரு பஸ்ஸு அதுக்காட்டியும் எடுத்திட்டா நா அண்ணன் வரலியேன்னு எறங்கிட்டேன். பாத்தா கடயில அண்ணன் இல்ல. ஒடிப்போயி பஸ்ஸில ஏறிப் போயிடுச்சி போல இருக்கு." கதை ஒன்று ஒட்டுப்போடுவது சிரமமாக இருக்கிறது. "என்னம்மா, ராநேரம் பதனமா இருந்துக்கிடாம இப்பிடி எறங்குவாங்களா?” "எங்கிட்ட காசொண்ணுமில்ல. அண்ணன் வராம நாம் போயிட்டு டிரைவர் கேட்டா என்ன பண்ணுவே?...” “எந்துாரு...?” "புதுக்குடி போவணும்.” "காலம அஞ்சரைக்குத்தா இனி பஸ்ஸு.” "அதா, ஒங்கடட்ல வந்து தங்கிட்டு, மொத பஸ்ஸில கொஞ்சம் ஏத்திபுட்டீங்கன்னா,... நா உங்களுக்கு. உங்கள என்னிக்கும் மறக்கமாட்டேன்." 'புதுக்குடில எந்தப் பக்கம்?” அந்தப் பெண் இடைமறித்தாள். "ரதவீதிக்குப் போகணும்.” “என்னாம்மா, புத்திகெட்ட பொண்ணா இருக்கிறியே? அவரு ஆம்பிள ஓடிவந்து ஏறிப்பாரு. டைவரிட்ட சொல்லி பாக்கச் சொல்லுறதில்ல?”