பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 சேற்றில் மனிதர்கள் அல்லாம் எதோ கையில காசு கெடச்சா கள்ளுக்கடயில குடுத்திட்டு பேசாம போயிடுறாங்க. அல்லாரும் வரணும்.” “சரிப்பா, வாரம் போ...” "தடி, கம்பு அருவா எல்லாம் கொண்டிட்டு ஒரு ஆறு மணிக்கே வந்திடணும். நமக்கென்னாத்துக்குன்னு நினைச்சிரக் கூடாது. நம்மளப்போல தொழிலாளி வீரபுத்திரன்." - "சரிப்பா...' "கோயில் திருவிழாவுக்கு இங்கேந்து ஒரு பொம்பிளயும் மகில் எடுத்திட்டுப் போகாம பாத்துக்குங்க. நமுக்கும் அதுக்கும் ஒண்னும் சம்பந்தமில்ல.” "சரிப்பா...' அவர் சரிப்பா சரிப்பா என்று சொல்லும்போது இவனுக்குச் சிறிது சந்தேகம் தோன்றுகிறது. "என்னாடா இந்தப்பய யாருன்னு நினைச்சிராதீங்க. நாம பலத்தக் காட்டனும்.” 'அதான் சொல்லிட்டியேடா...! எல்லாம் கேட்டுக் கிட்டீங்கல்ல? பாத்துப்புடுவோம்.” "அப்ப. இத்தச் சொல்லி போட்டுப் போவத்தா வந்தேன். நா வார.' வடிவு எழுந்திருக்கிறான். தடியை எடுத்துக் கொள்கிறான். சாக்குக் கொங்காணியையும் எடுத்துப் போட்டுக்கொள்கிறான். எல்லா ஒசைகளையும் அசைவுகளையும் துடைக்கும் வண்ணம் ஒரு திரை விழுந்து விடுகிறது. இவன் வாயிற்படியைத் தாண்டும்போது, அந்தத் திரையை மெல்லக் குத்துவதுபோல் குழந்தையின் சிணுங்க லொலி கேட்கிறது. - -- 21 அம்சு இரவுச் சோறுண்டபின் தட்டை எடுத்துக் கொண்டு செல்கிறாள். ஒரு முழு நாளாகிறது. தாயும்கூடக் காந்தியிடம் பேசவில்லை. காந்தி மூலையில் நின்று உள்ளுறக் குமுறுகிறாள். கிட்டம்மா "இடியாத் தலல வுழுந்திடிச்சுக்கா!” என்று ஒலமிட்டுக்கொண்டு வருகிறாள். "வாய்க்காரு புதுக்குடி போயிருக்காரு. சொல்லிட்டுப்