பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 29 'அடிக்க மாட்டாரு. ஆனா எதானும் பே சிட்டே இருப்பாரு.” "அந்தக் காலத்தில் உங்கம்மா நல்ல உசரமா செவேல்னு எப்படி இருப்பா? இவன் சொல்லுவான். ஐயரே, இவ மட்டும் ஏனிப்படி நெறமா இருக்கா தெரியுமா? இவொ இந்த சேத்தில உழி இ ) அடிமப் பய ரெத் தத்தில வந்த வ இல்ல. கோட்டியூருபண்ண, தேவதானம், நூறுவேலி, பசுமடம், சத்திரம் கோயில்லாம் ஒரு ஐயிரு பாத்திட்டிருந்தாரு செவேல்னு ரோசாகணக்க.. கடுக்கன் ரெத்தமாட்டுச் செவப்பு. கருகருன்னு பெரிய முடி இவாயி தொடுப்பாயிடிச்சி. புள்ள பொறந்ததும் இவப்பன் ஆட்டம்மா கிட்டப் போயி நின்னானாம். துணி, கஞ்சிக்கு நொய்யரிசி, வெளக்கெண்ண, எல்லாம் குடுத்திட்டு, ‘ஏண்டா சங்கிலி பொட்டப் புள்ளன்னியே, கறுப்பா இருக்குதா, சேப்பா'ன்னு கேட்டாங்களாம். இது இங்க வெள்ளிக் குஞ்சாட்டம் இருக்குதுன்னு எப்படிச் சொல்லன்னு நின்னாராம்.” சம்முகம் இப்போது சிரித்துக் கொள்கிறார். ஆனால் காந்தி இதே கதையைத் தாத்தா சொல்லிச் சீண்டக் கேட்டிருக் கிறாள். பாட்டிக்குக் கோபம் வரும். "ஆமா, ஒங்கிட்டத்தா வந்து சொன்னாரு சும்மா பச்ச புள்ள கள வச்சிட்டு என்னா பினாத்தற..” என்பாள். 'ஆனா சம்மு கம், உங்கம் மா அந்தக் காலத்தில் கம்பீரமாத்தான் இருப்பா. மிராசு ஆளெல்லாம்.திமுதிமுன்னு அரிவாளும் தடியும் கம்பும் எடுத்திட்டு வர போலீசு ஒருபக்கம் வளைச்சிக்க, மடியில கல்லக் கட்டிக்கிட்டு ஆம்பிளகளுக்குக் கவண் எறியக் குடுத்தவல்ல உங்கம்மா?. அவ சாயல உம் பொண்ணுக்கு இருக்கு!” சம்முகத்துக்குப் பெருமையாக இருக்கிறது. "அதொரு காலம். சாட்டையடிவாங்கிட்டு சாணிப்பால் குடிச்சிட்டு ஏன்னுகேக்கத் தெரியாம இருந்தவங்கள மனிசங் கன்னு சொல்லித் தட்டி எளுப்பவே ரத்தம் குடுக்கவேண்டி இருந்திச்சு. இப்ப அதெல்லாம் சொன்னாப் புரியாது. ரமேசு எங்க இருக்கு இப்ப? வேலையாயிட்டுதா?” 'அவன் துபாய்க்குப் போயிட்டான். அவன் பணம் அனுப்பித்தான் இப்ப குடும்பம் நடக்குது சம்முகம்...?”