பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 37 வீடு திரும்புகையில் கால் அதிகமாக வலிக்கிறது. பொழுது இறங்கி விட்டது. நடவுக்கும் உழவுக்கும் சென்றவர்கள் கரை யேறிக் கொண்டிருக்கிறார்கள். கடைத்தெருவில் வியாபாரமும் கூச்சலும் உச்சக்கட்டத்தில் மோதிக்கொள்ளும் நேரம். கள்ளுக் கடையில் கலகலவென்று ஆட்களின் குரல்கள் உயர்ந்து ஒலிக்கின்றன. அக்கரையிலிருந்து மூங்கிற்பாலம் கடந்து, மூலை ரங்கனும் விருத்தாசலம் பிள்ளையும் வருகின்றனர். இவர் பாதையில் எதிர்ப்படுவதால், சற்றே ஒதுங்கி வழிவிட நிற்கிறார். "ஏம்ப்பா சம்முகம்? நான் சொல்லி ஆறு மாசமாவுது, காதிலேயே போட்டுக்காம இருக்கியே? டவுனுக்கா போயிட்டு வார? மத்தியானம் நேத்தும் வீட்டுப்பக்கம் ஆளனுப்பிச்சேன், இன்னிக்கும் விசாரிச்சேன்.” கிளியந்துறைப் பிரமுகர்களில் ஒருவராகச் செல்வாக்குப் பெற்றிருக்கும் குரல் அதட்டுவதுபோல் ஒலிக்கிறது. "என்னாங்க விசயம்?...” "பாத்தியா? மறந்தே போன? கோயில் பக்கம் குடிசயப் போட்டுட்டு எல்லாம் அசிங்கம் பண்ணிட்டிருக்கானுவ! பத்து வரு சத்துக்கு முன்ன, அப்ப பள்ளிக்கூடத்துக்கு இடம் வோனு ன்னு இவனுவள குடிசயத் தள்ளிக்கொண்டு போடனும்னு சொன்னாங்கதா, அப்பதா எல்லாம் போதாத காலம், கோயிலுக்கு பூசை, விழா ஒண்னும் இல்லன்னு இருந்திச்சி! பத்து வருசமா ஏதேதோ ஊரிலும் கஷ்டம், இப்ப இந்த வருசம் கோயிலைச் செப்பம் பண்ண விழா நடத்துறதுன்னு தீர்மானம் பண்ணிருக்கு. வீராசாமிப் பிள்ளை, வரதராஜன் எல்லோரும்தான் முடிவு செஞ்சி அப்பவே சொன்னேன், உனக்கு விசயமே மறந்துபோச்சி.” "...இல்லிங்க. நீங்க ஆறு மாசத்துக்கு முன்ன சொன்னதா நினைப்பில்ல. வேற எடம் தோதாக்கிட்டில்ல கிளப்பச் சொல்லனும்? இப்ப நடவு, உழவுன்னு நெருக்கடியா யிருப்பாங்க...” "அது வருசம் பூராத்தா இருக்கு இப்ப ஆத்துக்கு அப்பால அரிசனங்களுக்குக் குடிசை போட்டுக்கலான்னு சொல்லி மாரிமுத்து, வீரபுத்திரன்லாம் போட்டுக்கலியா? அந்தப்பக்கம் போட்டுக்கட்டுமே?" "சொல்றேங்க, ஒரு ரெண்டு மூணு மாசம் பொறுத்துக்