பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சேற்றில் மனிதர்கள் வருகிறாள். காளி, சிவத்தையன், மாமுண்டி. எல்லாம் போங்க, காலம பாத்துக்கலாம்.' உள்ளே வந்து உட்காருகிறான். 'குளுருது அந்தப் போர் வய எடுத்திட்டு வா...” வெளியே போக வர, சற்றுப் புதிதாகப் பெட்டியில் வைத்திருக்கும் போர்வையை எடுத்து வந்து போர்த்துகிறாள் லட்சுமி. “காச்சல் அடிக்குதா என்ன?” கன்னத்தில், நெற்றியில் கை வைக்கிறாள். நல்ல குடு இருக்கிறது. - "இவனுக அடிச்சிப் புரண்டா போலீசுகாரனுக்கு வாக்கரிசி, நம்ம பொழப்பு எப்படியாயிட்டது பாரு?" "சோறு சாப்பிடுறீங்களா? அடுப்புல சூடாயிருக்கு. குழம்பும் நல்லாயிருக்கு?” "சோறு குழம்பு எதும் நாக்குக்கு ருசிக்கிறாப்பல இல்ல. சூடா கொஞ்சம் காபி வச்சுத் தந்தா நல்லாயிருக்கும். இன்னி முச்சூடும் வீணலச்சல்.” காபித் துளில்லை, தேயிலைத் துள்தானிருக்கிறது. சீனியும் கிடையாது. துருப்பிடித்த தகரம் ஒன்றில் நாலைந்து வெல்லச்சுகள் இருக்கின்றன. அம்சுதான் வயிற்றுப்பட்டிவெல்லச்சு வாங்கி வைத்தால் அவள் தான் தின்றுவிடுவாள். நாகு வெல்லம் வைத்தால்தான் பிடிசோறு தின் பான். இப்போதெல்லாம் அவனை அப்படிக் கவனித்துச் சோறே போடுவதில்லை. நினைக்கும்போதே வயிற்றில் சொரேலென்று சங்கடமேற்படுகிறது. பகலில் பிடிவாதமாக அவள்தான் நான்கு பிடி ஊட்டுவாள். கிழவி சோறு போட்டிருப்பாள். ஆனால், சாப்பிட்டிருக்க மாட்டான். அதுதான் சோர்ந்து உறங்கிக் கிடக்கிறான். "சக்கர போட்டியா?” "ஏதுங்க சக்கர வெல்லந்தா. ஒரச்சுத் தட்டிப் போட்டே வாய்க்கு நல்லாயிருக்கா?” "என்னாத்துக்குப் போட்ட? எனக்கென்னமோ ரத்தத்துல சக்கர இருக்குமோன்னு பயமாயிருக்கு." "ரத்தத்தில் சக்கரயா? அதெல்லா ஒண்னுமில்லிங்க. சக்கரயா நெதம் தின்னிட்டிருக்கிறீங்க, ரத்தத்தில அது வந்து குந்தியிருக்க?” --