பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

    • பிச்சையா எடுக்கே?” என்று முனகிக் கொண்டான்.

'க்யூ முன்னேறியது. ச்சை-உடல் முறியச் சம்பாதித்த காசை கள்ளுக் கடைக்கும், தவணைக்காரனுக்கும் கொடுத்து விட்டு வாழும் ரிக்ஷாக்காரன் தருமத்தை ஏற்கமாட்டானா? * தருமம்” என்பதே வெறும் அலங்கார வார்த்தை தானா?...அப்பொழுது என்னை ஏற்றி வந்த ரிக்ஷாக்காரன் ஓரணாவுக்காக மல்லாடி னான். இவன் ஓரணாவைத் தூர எறிகிறான்! இது பிச்சைக் காசு எச்சில் காசு!. உழைப்புக்குத் தகுந்த கூலியை மல்லாடிப் பெறுவது குற்றமல்ல; உழைக்காமல் வாசகம் ஏற்பது தான் குற்றம்!... ஆனால் படித்தும், பட்டம் பெற்றும் லஞ்சம் பெறும் அதிகார வர்க்கம்! உழைப்பவனைச் சுரண்டி உயிர்வாழும் பணக்கும்பல்! அவர்களை விட இந்த ரிக்ஷாக் காரன்!......' 'க்யூ முன்னேறியது. அந்த மனித ரயிலுக்கு நானே இஞ்சின். எனக்கு முன்னுள்ளவர் டிக்கட் வாங்கி விட்டார், நான் பணத்தை நீட்டினேன். ஆனால் புக்கிங் சாத்தப்பட்டது. "இன்னம் ஒரு டிக்கட் ஸார்” என்றேன் நான். "எக்ஸ்க்யூஸ்மி” என்ற குரல் புக்கிங் அபீ ஸ் பலகைக்குப் பின்னிருந்து கேட்டது; பணத்தைப் பையில் போட்டுக் கொண்டு வெளி வந்தேன். க்யூ கலைந்தது. என் இதய நிறைவு சொல்லிற்று: “சேற்றிலே மலர்ந்த செந்தாமரைகளை மினர்வா டாக்கீ ஸுக்குள்ளேதான் காண முடியுமா? வெளியேயும் காண முடியாதா? -1947