பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயும் நானும் சங்க ஊழியர்கள் மீதும் வாரண்ட் பிறப்பித்தவர், தொழி லாளர்களின் கட்டுப்பாட்டைக் காக்கவும், அமைதியை நிலை நாட்டவும் வேண்டி, நான் தலைமறைவாய் இருக்கவேண்டு மென்று கட்சி உத்தரவிட்டது. அப்பா! தலைமறைவாக வாழ்வதென்பது அத்தனை சுலபமான காரியமா? ஆனால், அதே சமயம் சர்க்கார் ஆள் தூக்கி அவசரச் சட்டத்லதக் கொண்டு வந்தனர். உடனே அடக்குமுறை: கட்சித் தோழர்கள் வேட்டை; வேலுார் சிறை: விசாரணையற்ற சிறை வாசம்!........ ஒரு நாள் திடீரென்று கார்விப்பட்டியில் (தொழிலாளர் களுக்கும் குண்டர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டுவிட்டது. இதுதான் சமயமென்று போலீsலார் தலையிட்டுத் தொழிலா ளரத் தாக்கினர், கண்ணீர்ப் புகை; துப்பாக்கிப் பிரயோசம்;' 144; ஸ்பெஷல் போலீஸ் முதலிய அதிரப் பிரயோகங்கள்!... அன்று மாலை எனக்கு உத்தரவு வந்தது. உடலடியாகச் சார்லிபட்டிக்குச் சென்று, தொழிலாளரைச் சந்தித்து நிலைமையைத் தெரிந்து, வேண்டுவன செய்யவேண்டும் என்று கட்சி உத்தரவிட்டது. சார்லிப்பட்டிக்கும். நான் பதுங்கியிருத்த 'வளைக்கும் சில மைல் தூரம்தான் இருக்கும். இரவோடு இரவாய்ச் சைக்கிளில் அங்கு சென்று தோழர்களைச் சந்திக்க வேப்படும். ஊர் நிலைமை ஒரு புறம்; ஏற்கனவே விலைக்குள் சிக்காது அஞ்ஞாதவாசம் புரியும் என் நிலைமை ஒருபுறம், அன்றிரவு எட்டு மணிக்கே புறப்பட்டேன். பூசி மெழுகியதுபோல் வெண் மேகங்கள் நிலவை மறைத்திருந்தன, மெல்லிய பனித் திரை கண் - முன்னே தொங்கிக்கொண்டிருந்தது. அழுது வழியும் நிலவொளியில் சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்தேன். தலையிலே முன்