பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயும் நானும் இந்த ஏழை மக்களுக்குரிய கருணையும் அன்பும் கடமை உணர்ச்சியும் படித்தவர்கள் - பணமுடையவர்களிடம் இல்லையே! 'இந்தப் பாமரர்கள் கல்வியற்றவர்கள்; கலாசாரம் தெரியாதவர்கள்; மனிதனாக வாழும் இரண்டு கால் ஜந்துக் கள்' என்றெல்லாம் பெரியவர்கள் சொல்லுகிரிகா. உண்மையில் மனிதத் தன்மையை விடச் சிறந்த கலாசாரமும் நாகரிகமும் வேறு உண்டா? பார்வதியைப் போல, ஈவிரக்க மற்ற, பகல் வேஷக்காரர்கள்!... " மூட். 63டக் கடி பொறுக்கமாட்டாமல் எழுத்து உட்கார்ந் தேன். தெருவில் 'சறுக் சறுக்' கென்ற பூட்ஸ் சத்தம் கேட்டது; திடீரென்று ராக்கன் வீட்டு வாசலில் நின்றது. மறு நிமிஷம் கதவும் தட்டப்பட்டது. - 'யாரங்கே ??? யாரா? திர) கதவை!!! எனக்கு விஷயம் புரிய வெகு நேரம் ஆகவில்லை. 'அகப் பட்டுக் கொண்டோம். இனித் தப்ப வழியுமில்லை; தேரழு மில்லை' என்று எண்ணி மூட்டை முடிச்சுகளை வரிச் சுருட்டி னேன்; விளக்கை ஊதி அணைத்தேன்; எதிர்த்தாற்போல் ஆளுயரத்திலிருந்த ஜன்னல் வழியே தப்பி ஓடலாமென்றால், அதிலுள்ள மூங்கில் பட்டைகளை முறித்தெறிவதற்குக் குறைந்த பக்ஷம் ஐந்து நிமிஷங்களாவது வேண்டும். அதற்குள் மாரி... உள்ளே ஓடிவந்தாள்; “என்னங்க, என்ன பண்றது? என்று பரிதவித்தாள். 1 பரவாயில்லை. முடிஞ்சா அவனுங்களைக் கொஞ்சம் எப்படியாவது தயக்காட்டிரு...அதுக்குள்ளே ...” <! சரிங்க”-அவள் வெளியே ஓடினாள், நான்: மூங்கில் பட்டையில் கை வைத்து இழுத்தேன்; முற்றத்தில் என்ன நடக்கிறது என்பதையும் கதவிடுக்கு வழி யாகக் கவனித்துக் கொண்டேன்.