பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கேள்வியும் பதிலும் அறைந்து கொண்டான். அந்த அடியின் சூட்டால், அவனுக்குத் தன் நினைவே திரும்புவது போலிருந்தது. நிற்கச் சக்தியற்றுத் தளர்ந்து போயிருந்த அவன் - லாக் கப்பின் அளிக் கதலவப் பிடித்தவாறே கீழே சந்து படுத்தான். போலீஸ் ஸ்டேஷன், சேகண்டி மணி கணீரென்று ஒரு முறை ஓவித்து ஓய்ந்தது, அலை பரவிச் சிதறும் எந்த ஓசையின் ரீங்காரம் அவனது மூளைagள் புகுந்து அதைச் சிலுப்பி உணர்வூட்டிவிட்டது. அவன் மரத் திலே தோன்றிய சிந்தனையால் வாடிய உதட்டில் ஒ . 1. புன் கை வேதங்கிச் சாம்பியது. தூக்கம் கலைந்து உசும்பியெழுந்த சிந்தனை திக்குத் திசைகற்றுத் திரிவத் தொடங்கியது, - சில மணி நேரத்துக்கு முன் நான் கான்சன நிலையில், சிடத் தேள்? இந்த உடம்பில் விரற்கடை அகலத் துணியில்: நான் யார், ஏன் இந்தக் கூதிக்கு வந்தேன் என்று கேட்பதற் குக்கூட நாதியில்லை; குடல் விழுங்கும் பசியால் நாள் இடித்த போது, எனக்காகப் பரிதாபப்பட்ட ஒரு ஆளில். இப்போதோ..,? இவ்வளவு நேரத்துக்குள். என்ன மாறுதல்! இடை,பிலே நாலு முழத் துண்டு; என் பெயரைக் கேட்டுப் பதிவு செய்ய ஒரு போலீஸ் உத்தியோகஸ்தன்; என் நிலையைக் கண்டு அனுதாபப்பட ஒரு போலீஸ்காரன். இந்த மாறுதல்; எப்படி நேர்ந்தது? ஏன் நேர்ந்தது? ... ஏன்? ஏன்?... --ஏனா? இதெல்லாம் சர்க்காரின் சட்டத்தை நிலை நிறுத் துவதற்காகத்தானே. நேற்று தான் ஒரு வாய்ச் சோறின்றி நாய் மாதிரி தெருத் தெருவாய் அலைந்தபோது, இந்த சர்க் காரோ, இதன் சேவகர்களோ என்னை ஏனென்று கேட்டார் களா? இன்று நான் கட்டியிருந்த கெளபீனத்தையும் தொலைத்துவிட்டு, மானம் மறைக்கக் கையளவுத் துணி