பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வியும் பதிலும் தார். பிறகு சாவதானமாக அவன் பக்கம் திரும்பி, கடுமை யான குரலில் கேட்டார்; . "நடுத் தெருவிலே நிர்வாணமாக கிடந்திருக்கியே, ஆணும் பெண்ணும் நடமாடும் இடத்திலே அப்படிக் கிடக் கிறதுக்கு . உனக்கு வெட்கமில்லை? உனக்கு மானமில்லை? 'ரோஷமில்லை?” , அவன் உதடுகள் படபடவென்று துடித்து நெளிந்தன; கண்கள் நெருப்பைக் கக்கப் போவதுபோல் சிவந்து. கனன்று கொதிப்பேறின; நடுநடுங்கும் கரங்கள் முறுகிப் பிசைத்தன்; திடீரென்று - 'மடையுடைத்துப் பொங்குவது போன்) ஆவேசம் அவன் மூச்சில் குடிகொண்டு இரைந்ததும் எரிமலை வெடித்துச் சிதறுவதுபோல், துடிதுடிக்கும் அவனது வாய்ப்பூட்டு உடைந்து சிதறி வார்த்தைகள் புறக்கத் தொடங்கின;. "யாரைப் பார்த்துக் கேட்கிறீர்கள். இந்தக் கேள் வியை? எனக்கா மானமில்லை? ஊராரின் மானத்தையெல். லாம் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு என்னைப் போன்ற நெசவாளிகளின் மானத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதா, உங்கள் சர்க்கார்? உழைத்துப் பாடு பட்ட எங்கள் கைகளை முறித்துவிட்டு, எங்கள் பிழைப்பிலே மண்ணடித்து, நாங்கள் ரெண்டு பிள்ளைகளோடு புழுப்போல் அடித்துச் சாவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறதே, இந்த சர்க்கார்? யாருக்கு மானமில்லை? என் போன்ற உழைப் பாளிகளை அரை முழ்த் துணிக்கும் நாதியற்று அவமானப்பட விட்டு விட்டு, சுதந்திரம் சுதந்திரம் என்று வாய் கிழியப் பேசுகிறதே, இந்த ஆட்சி? யாருக்கு மானமில்லை? என்னைச் சந்தி சிரிக்க வைத்ததும் போதாதென்று, குற்றவாளியாக்கிக் கூண்டிலேற்றிச் சட்டத்தை நிலைநாட்ட மானஈனமின்றி முன் வருகிறதே இந்த சர்க்கார்! யாருக்கு மானமில்லை? பாருக்கு ரோஷமில்லை... யாருக்கு...?”