பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிப்புரை ரகுநாதன் என்ற பெயரில் எழுதி வரும் திரு. சிதம்பர ரகுநாதன் முந்திய தலைமுறையைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர். ஆற்றல் மிக்க எழுத்தாளரான இவரது கதைகள்,நாவல்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்,மற்றும் 'திருச்சிற்றம்பலக் கவிராயர்' என்ற புனைபெயரில் இவர் இயற்றியுள்ள கவிதைகள் முதலியவை அவற்றின் தனித்த முத்திரையினால், இவருக்கு இலக்கிய உலகில் ஒரு சிறப்பான ஸ்தானத்தைத் தேடிக் கொடுத்துள்ளன. இவரது 'பஞ்சும் பசியும்' என்ற நாவலே தமிழ் மொழியிலிருந்து முதன் முதலில் ஐரோப்பிய மொழியொன்றில்(செக் மொழியில்) மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவலாகும். மேலும் இவரது கதைகள் பலவும் செக், ஹங்கேரியன், ஜெர்மன், போலிஷ், ரஷ்யன் போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரான இவர், அவரது படைப்புக்களைத் தொகுத்துப் பல் தொகுதிகளாக வெளிக்கொணர உதவியதோடு, புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் மிகவும் போற்றத்தக்க முறையில் நூலாக எழுதி வழங்கியுள்ளார். புதுமைப்பித்தனின் இலக்கியப் பரம்பரையில் பூத்த மலராக விளங்கிய இவர், தமிழ் நாட்டில் முற்போக்கு இலக்கியப் படைப்புக்களுக்கும் முன்னோடியாக விளங்கியுள்ளார். இவரது இலக்கியப் பணிகளைப் பாராட்டி,இவருக்கு சோவியத் நாடு வழங்கும் நேரு நினைவுப் பரிசும்இருமுறை வழங்கப்பட்டுள்ளது. இப்பரிசைப் பெற்ற வெற்றியாளர் என்ற முறையில் இவர் சோவியத் நாட்டுக்கும் சென்று வந்துள்ளார். 'சேற்றில் மலர்ந்த செந்தாமரை' என்ற தலைப்பைக் கொண்ட இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகள்