பக்கம்:சைவமும் தமிழும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் # 49 இங்ங் னம் அநுபூதிமான்களின் அநுபவ உரைகள் அளவில்ல வாய்த் தோன்றி நின்று ஆண்டவன் அநுபவப் பொருளர்ய் நிற்றலை அரண் செய்கின்றன. இவை யாவும் பதிஞானத் தால் விளைந்த அநுபவங்களேயாகும் என்பதையும் உணர்ந்து தெளிந்து உளங் கொள்க. இந்த உணர்வை சித்தாந்திகள் பாரிசேடப் பிரமாணம் ' (ஒழிபு அளவை) என்று கூறுவர். - பாசத்திற் கட்டுப்பட்ட உயிர்களின் அறிவும் அவற்றின் கருவிகரணங்களுமே பசுஞானம் என்றும் பசுகரணம் என்றும் பெரியோர்கள் சொல்லுவர். அன்றியும், பாசத்தினின்றும் விடுபட்ட சீவன் முத்தர்களாகிய பெரியோர்களின் அறிவும் கருவிகரணங்களும் சிவபோகமாயும் சிவக்ரணங்களாயும் நிற்கும் என்றும் அவர்கள் பகர்வர். இக்கருத்துகளையும் தெளிவுறுத்துவேன். பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஒளி வீசு கின்றதைக் கண்டிருப்பாய். இங்கனம் ஒளி வீசுவது எது? இரும்பா? நெருப்பா? இதனை ஊன்றி நோக்கின் ஒளி விசுவது நெருப்பு என்பது தெளிவாகும். அதுபோல, சிவத்தைச் சார்ந்த உயிரும் அதன் கருவி கரணங்களும் இறைவனை அறிகின்றன என்று சொல்லும்போது, அந்த அறிவு இ ைற வ ன து அறிவு என்பது விளங்கும். ஆகவே, இறைவன் தன்னாலேதான் அறியப்படுபவனல்லது பிறவற்றால் அறியப்படுதல் எக்காலத்தும் இல்லை என்பதை அறிவாயாக, - ம்ேலும், சிவம் ஒரு தன்மையுடையதன்றி, கதிரவனும் கதிரும் போல, தானும் தன் சக்தியும் என இரு தன்மை யுடையதாய் நிற்கும் என்பதை முன்னர் விளக்கியதை ஈண்டு நினைவு கூர் க. கண் கதிரவனை நோக்க வேண்டு மாயின் அவனது ஒளியாகிய கதிர்களின் வழியேதான் 112. மூவர் உள்ள இடத்தில் ஒரு பொருள் களவு செய்யப் படின், இருவர் கள்ளர் அல்லர் என்பது தெளியப்பட்டால், மற்றொருவனே கள்வன் எனத் துணிதல் போல்வது.