பக்கம்:சைவமும் தமிழும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்ச இயல் 1 TT என்பதை நீ அறிவாய். விளக்கு பொருள்களை விளக்க வந்ததேயன்றி மறைக்க வந்ததன்று; மறைப்பது எப்பொழு தும் இருளேயன்றி விளக்கு அன்று. அது போலவே சகல நிலையில் மெய்யுணர்வு தோன்றாமல் விபரீத உணர்வு தோன்றுவதும் மாயை கன்மங்களால் விளைவதன்று; ஆன வத்தால் விளைவதேயாகும். ஆணவத்தின் சக்தி இவ்வாறு சகல நிலையில், விபரீத ஞானத்தை-மயக்க உணர்வைஉண்டாக்குதலால் அப்பொழுது அதன் சக்தி அதோ கியா மிகாசக்தி' என்ற பெயரில் வழங்கும். அதோ நியமிகைகீழ்நோக்கிச் செலுத்துவது. மகத்தாகிய ஆன்மாக்களை அணுத்தன்மையாய்ச் செய்தல்பற்றி வந்த காரணப் பெயரே "ஆணவம்’ என்பதை முன்னர்க் கூறியதை ஈண்டு நினைவு கூர்க. இந்நிலை அதற்கு மாயை கன்மங்களின் சார்பினால் வருதலின், இவ் வியல்பு ஆணவத்தின் தடத்த நிலை எனப்படும் பொது இயல்பாகும். இதனால் மாயை கன்மங்களின் சொரூபம் விளக்கும் தன்மை என்பது தெளி வாகும். மாயையின்தன்மை விளக்குவதாயினும், ஆணவத் தின் மயக்குதல் தன்மைக்கு ஏதுவாதல்பற்றி, மயக்கும் தன்மை யுடையதாகவும் கூறப்படும். - வைத்ததோர் 6ುಗಲ್ಲ ಊTಣ್ಣು மயக்கமும் செய்யு மன்றே." என்ற சித்தியாரின் கூற்று இதுபற்றியதேயாகும். சுத்த நிலையில் உயிர் இறைவன் திருவருளை நேரே பெற்று விளங்குகின்றது என்பதை நீ அறிவாய். இந்தப் பேரொளியின்முன் ஆணவத்தின் மறைத்தல் சக்தியும், மாயை கன்மங்களது சிறு விளங்கச் சக்திகளும் சிறிதும் முனைந்து நிற்கமாட்டாது அடங்கியே கிடக்கும். அதனால் அச் சக்திகள் அனைத்தும் அப்பொழுது அக்தர்ப்பாவித சக்தியாய்-அடங்கிக் கிடக்கும் சக்தியாய்-விடுவனவாகும். 5. டிெ. 2,53 சை, ச. வி.--12