பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325

மாணிக்கவாசகர்

 சுமந்து அடிபட்டார் எனவும் திருவாசகத்துள் கூறவில்லை யென்பதே இந்த அறிஞர்கள் கண்டுரைக்கும் அடிப்படை முடிபு. ஆனால், திருவாதவூரடிகள் தமது வரலாறு கூறும் நோக்கத்துடன் திருவாசகம் பாடவில்லை என்பதை மேலே கூறிய இரு பேரறிஞர்களும் உணர்ந்ததாக அவர்களுடைய கட்டுரைகள் காட்டாதொழிகின்றன. * திருவாதவூரடிகட்கு மாணிக்கவாசகன் என்று ஒரு பெயர் நாட்டில் நன்கு பயில வழங்குகிறது. இப்பெயரைத் திருவாலவாயுடையார் திருவிளையாடல்,ஞானகுரவனாய் வந்த சிவபெருமான் எடுத்து வழங்கியதாக, "மங்கைநாயகன் மாணிக்கவாசக, இங்குநில்என்று இயம்பிமறைந்தனன்"1[1]என்று கூறுகின்றது. திருவாதவூரடிகள் "வாக்கு உன் மணி வார்த்தைக் காக்கி" 2 [2] என்றும், 'பேச்சிறந்த மாசின் மணியின் மணி வார்த்தை'3[3] என்றும் ஞானகுரவனது அருளுரையைப் பாராட்டிக் கூறுவது காணுங்கால், இறைவனை மணி என்றும், அவனது அருளுரையை மணிவார்த்தையென்றும் பாராட்டிய சிறப்புப் பற்றி மணிவாசகன் என்பது தோன்ற மாணிக்கவாசகர் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பி முதலிய சான்றோர்களால் பெயர் கூறிப் பரவப்பெறுவராயினர் எனக் காணலாம். சான்ரறோர் வழங்கும் இனிய சில சொற்ரறொடர்களைக் கண்டு, அவற்றை வியந்து பாராட்டு முகத்தால் அச் சான் ரறோர்க்கு அத்தொடரையே பெயராக அமைத்து வழங்கும் முறை தமிழ் நாட்டில் சங்க காலந் தொட்டே இருந்துவரும் வழக்காறாகும். ஆயினும் இடைக்காலக் கல்வெட்டுக்கள் பலவும் அடிகளைத் திருவாதவூரர் என்றும் திருவாதவூராளி என்றும் வழங்குகின்றனவே யன்றி மாணிக்கவாசகர் என்ற பெயரை வழங்கக் காணோம்.

<bவரலாறுகள்/b>

திருவாதவூரடிகள் அருளிய திருவாசகம் திருக்கோவை

1. திருவால. திருவினே. 2. திருச்சதகம். 26. 3. பண்டாய நான்மறை. 7.


{{reflist}<

  1. திருவால.திருவினை
  2. திருச்சதகம்.26
  3. பண்டாய நான்மறை