பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் 359

பாட்டாகவும், மார்கழித் திங்களில் திருவாதிரை நாளில் தைத் திங்கள் காறும் நீராடும் தவத் தைக் நீராடல் எனச் . சிறப்பு நீராட்டாகவும் இருந்தது; பின்னர், மார்கழித் திங்களில் மணமாகாத மகளிர் பாவையை நிறுத்தி அதனை முன்னிலையாக்கித் தாம் கருதிய கருத்து நிறைவேறுதல் வேண்டித் தம்முடைய வழிபடு கடவுளே வாழ்த்தும் நெறி யில் இயங்குவதாயிற்று. இதனே ஆண்டாள் அருளிய திருப்பாவை நன்கு காட்டுகிறது. இத் திருப்பாவைக்கு உரைகண்ட பண்டைய ஆசிரியர், "ஆழ்வார்களிற் காட்டி லும் எம்பெருமான் பக்கல் பரம பக்தியுடையளான ஆண் டாள் அருளிச் செய்த திருப்பாவைக்குக் கருத்து : மார் கழி நீராட என்று ஒரு வ்யாஜத்தைக் கொண்டு, நோன்பு என்று ஒரு வியாஜத்தாலே எம்பெருமான் பக்கலிலே சென்று உனக்கு சேஷமாயிருக்கிற இந்த ஆத்மா அனர்த் தப்பட்ாதபடி எண்ணி, இதுக்கு ஸ்வரூபானுரூபமான கைங்கர்யங்களேயும் கொடுத்து, அது தானும் யாவதாத்ம பாவியாம்படி பண்ணியருள வேனும் என்று அபேகதிக் கிறது. இந் நோன்புக்கு மூலம் என்னெனில், மீமாம்ளை) யிலே ஹோளாதிகரண ந்யாயத்தாலே விஷ்டாசார லித்தம்; மேலேயார் செய்வனகள்' என்று ஆண்டாள் தானும் அருளிச் செய்தாள். பொய்யே நோற்கிருேமென்று சொல்லாமோ எனில் விவாஹங்களிலும் மரண பர்யந்த மான தசைகளிலும் வந்தால் பொய் சொல்லலாம்' என்று கூறுகின்றனர்.

திருவாதவூரர் பாடிய திருவெம்பாவையில் முதல் எட்டுப் பாட்டுக்களில் இளமகளிர் விடியற்கு முன்னர் எழுந்து ஒரு வரை யொருவர் எழுப்பி நீராடற்கு அழைக்கும் கருத்தும், ஐந்து பாட்டுக்களில் மகளிர் நீராட்டயரும் கருத்தும், ஒரு பாட்டில் மழையைப் பொழியுமாறு வேண்டும் கருத்தும், இறுதிப் பாட்டில் இந்நீராட்டு மார்கழி நீராட்டு என்னும் கருத்தும் எஞ்சியவற்றில் இறைவன் புகழ் எடுத்துப் பாடும் கருத்தும் உள்ளன. இத் திரு வெம்பாவையின்

1. திருப்பாவை வியாக்யானம். பக். 14-5.