பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டினத்துப் பிள்ளையார்

383


யாழொடுங் கொள்ள பொழுதொடும்புணரா, பொருள் அறிவறிவாராவாயினும் தந்தையர்க்கு, அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை[1] ' என்பது புறநானூற்றில் உள்ள தொரு பாட்டு. இதனை, "எழுத்தின் உறழாது வழுத்து பொருள் இன்றிக், குறிப்பொடு படாது வெறித்த புன் சொல்லே, ஆயினும் பயங்த தம் சேயவர் சொலும்மொழி, குழலினும் யாழினும் அழகிதாம்”[2] என்று அடிகள் கூறுகின்றார். ' பாதாள மேழினும்கீழ்ச் சொற்கழிவு பாதமலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருண் முடிவே'[3] என்பது திருவாசகம் ; இதனை அடிகள்: அடியொன்று பாதல மேழிற்கும் அப்புறம் பட்டது இப்பால், முடியொன்று இவ் வண்டங்களைல்லாம் கடந்தது'[4] என்றும்; ' விரதமே பரமாக வேதியரும், சரதமாகவே சாத்திரங் காட்டினர், சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்"#வழிமாற்று[5]என்ற திருவாசகக் கருத்தை, சமயப் படுகுழி சமைத்தாங்கு அமைவயின், மானுடமாக்களை வலியப் புகுத்தும், ஆன விரதத்து அகப்படுத்தாழ்த்தும் அனையுணர் வெனக்கு வருமோ[6] ' என்றும் கூறுகின்றார். இவ்வாறே, மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மையிம்மேதகவே, பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று ஆண்டான் அருவரை ஆளியன்னைக் கண்டேன் அயலே, தூண்டா விளக்கனையாய் என்னேயோ அன்னை சொல்லியதே'[7] என்ற கருத்தை, அடிகள், "துணேயொத்த கோவையும் போல் எழில் பேதையும் தோன்றலும் முன், இணையொத்த கொங்கை யொடே ஒத்த காதலொடு ஏகினரே, அணையித்தர் ஏறு ஒத்த காளையைக் கண்டனம் மற்றவரேல், பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே'[8] என்று பாடுகின்றார்,

இறுதியாக ஒன்று : அடிகள் வழங்கிய சொற்றொடர்



  1. 1.புறம். 92.
  2. 2. திருக்கழு. 28.
  3. 3. திருவேம்பா.10.
  4. 4. கோயில். 6.
  5. 5.திருவாச. போற்றி.50.3
  6. 6. ௸ 24,
  7. 7 . திருக்கோவை 51.
  8. 8. திருவேகம். அங். 73.