பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406

சைவ இலக்கிய வரலாறு

தியனார் விளங்கும் திருப்பொதியிலில் யாகங்கள் பலவும் செய்வித்தவர் என்றும், புலமையாளர் என்றும், பெருந்துறவால் முனிவராக வாழ்ந்தவர் என்றும் அப்பாடலால் தெரியவருகின்றன என்பர்.”[1] தென்னவன் தமிழவேள் என்பார், “மெய்ம்மை யுணர்ந்தவன் என்றும், தரிசனங்கள் ஆறும் தமிழ்கள் மூன்றும், வடநூல் வகையும் நீதிநூலும் மேதகு புராணமும் பாதஞ்சல முதற் பனுவற் பயன்களும் உணர்ந்தவர் என்றும்”[2] கூறுகின்றனர்.

இக்காலத்தே புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிற்றண்ணல் வாயில் சயினக் கோயில் முன்மண்டபத்தைக் கட்டிய மதுரையாசிரியர் இளங்கோதமனார் என்று சான்றோர் ஒருவர் இருந்திருக்கின்றனர்.[3]


  1. A. R. No. 563 of 1911. சாச. தமி. சரி. பக். 27.
  2. A. R. No. 626 of 1926. சாச. தமி. சரி. பக். 28.
  3. A. R. No. 368 of 1904.