பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 423

கைலாசஞ் செல்லுதலேக் கண்டு மனங் கலங்கிய ஒளவை யார்க்கு விநாயகர் வெளிப்பட்டுக் 'கைலாசம் எங்கே உள்ளது ; தத்துவம் அறிந்தாயில்லே. சொல்லக் கேள்' என்று மெய்ஞ் ஞானுேபதேசம் செய்தார் எனக் கதையை மாற்றின் பொருத்தம் மிகுதியுமுண்டாம் : ஒளவையார் நூலிற் கூறும் விஷயம் அதுவே" என்று கூறியிருப்பது நோக்கத் தக்கது.

5. ஒளவையார் ஞானக்குறள் . இது முந்நூற்றுப் பத்துக் குறள் வெண்பாக்களால் ஆகிய நூல். திருவள்ளுவர் தமது நூலில் அற முதலிய முப்பாலும் கூறி வீடு கூருமையால் அதனே இந்த ஞான நூலால் ஒளவையார் பாடினர் என்பர். 'முத்திக் கவ் வையார் சொல் முந்நூற்றுப் பத்து முன்றன், சித்தத்தில் வைத்துத் தெளி' எனவரும் அதன் சிறப்புப் பாயிரம் இக்குறிப்புக்கு ஆதரவு தருகிறது. இந்நூல் முழுதும் யோக ஞானங்களே கூறப்படுகின்றன. பல குறட்பாக்களுக்குப் பொருள் யோக நூல் வல்லார்க்கே விளங்குவன. யாக்கை முதலியன கிலேபெறும் வழியாகச் சில குறட்பாக்கள் உரைக்கின்றன.

இதுகாறும் கூறியவாற்ருல், ஒளவையார் என்ற பெயர் பூண்ட சான்ருேர் பண்டை நாளில் இருவர் இருந்தனர் என்றும், அவருள் சங்கத் தொகை நூல்களுள் காணப்படு பவர் முன்னவர் என்றும், பின்னவர் ஈண்டுக் காட்டப் பட்டவர் என்றும் அறியலாம். பின்னவராகிய இவர் பாடி யன எனப் பல பாட்டுக்களும் அவற்ருேடு இயைந்த வர லாறுகளும் உண்டு. அவற்றையும் சங்கத் தொகை நூற் பாட்டுக்களேயும் கண்ட அறிஞருள், திரு. வி. கனகசபைப் பிள்ளையவர்களும் செந்தமிழ் ஆசிரியரும் இவர்கட்கு முன்பு தமிழ் நாவலர் சரிதை தொகுத்த ஆசிரியரும் ஒளவையார் ஒருவரென்றே கருதியிருக்கின்றனர். ஏனே

1. அவ்வையார், பக். 135.6. 2. Tamils Thousand Eight Hundred Years Ago. p. 206; செந்தமிழ். Vol. II. 6, 7. -