பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

458

சைவ இலக்கிய வரலாறு



என வெம்மையாகப் பேசுகின்றார். சிவனைத் தொழாராயினும் இனிதே வாழ்ந்து இறப்பவரும் உண்டே எனின், அவர்கள் இயல்பு இது என விளக்க முற்பட்டு,

“வான்தோய் சிராமலை வந்துஇறைஞ்
        சாதவர் மையல்வைகும்
தேன்தோய் மொழியவர் செவ்வாய்
        நினைந்துவெள் வாய்புலர்ந்து
மீன்தோய் கடலன்ன வேட்கைய
        ராகித்தம் மெய்ம்மை குன்றி
ஊன்தோய் உடல்இங்கு ஒழித்து
        உயிர் போக்கும் உறைப்பினரே”[1]

என்று சொல்லி ஏசுதலும் செய்கின்றார்.

வேம்பையர்கோன் நாராயணனர் தாம் சிராமலைப் பெருமான்பால் அன்புகொண்டு நினைந்து வழிபடுங்கால், சிவஞான இன்பத்தேன் தம் உள்ளத்தில் ஊறிப் பெருகி உடல் பூரிக்கும் அனுபவம் கண்டு வியந்து,

“இனிச்செல்வர் முன்கடைக்கு என்செய்ச் சேறும்?
        இனையல் நெஞ்சே,
கனிச்செல்வ மாம்பொழில் காவிரித் தென்கரைப்
        பூவிரிக்கும்
முனிச்செல்வர் சேரும் சிராப்பள்ளி மேய
        முக்கட்சுடரைத்
தனிச்செல்வனைப் பணிந்து உள்ளமிர் தூறித்
        தடித்தனமே”[2]

எனவும், இந்த இன்பநிலைக்குக் காரணம் சிவனை மறவாது உள்ளத்தே உள்ளும் உளவு எனவும், அது தமக்குக்கிடைத்தது முன்னைப் பிறவிகளில் நோற்ற தவம் எனவும் கூறுவராய்,

“வள்ளலுக்கு மலைமாதர்தம் கோனுக்கு
        வார்சடைமேல்
வெள்ளெருக்கும் மதியும் பொலிந்தானுக்கு
        வெண்பளிங்கு


  1. 1. சிரா.ய. 68.
  2. 2. ௸ 35.