பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்நூல் வெளியீடு


தமிழ் இலக்கிய வரலாறு
தொல்காப்பியம்
ஆக்கியோர்:
வித்துவான். க. வெள்ளைவாரணனார்
விரிவுரையாளர், தமிழாராய்ச்சித்துறை
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

இந்நூல் தமிழிலக்கிய வரலாற்றில் செந்தமிழ்த் தொன்னுலாகிய தொல்காப்பியத்தை பற்றிய வரலாறாகும். தமிழ் மொழியின் அமைப்பினையும் தமிழர் வாழ்வியலாகிய நெறிமுறையினையும் ஒருங்குணர்த்தும் பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் தோற்றம் பற்றியும் அதனை இயற்றிய ஆசிரியர் தொல்காப்பியனார் வாழ்ந்த காலம் பற்றியும் உரையாசிரியர்களாகிய முன்னோர் கூறியுள்ள அரிய கருத்துக்களையும் இக்கால ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள பல்வேறு கருத்துக்களையும் ஒப்பவைத்து ஆராய்ந்து விளக்கும் முறையில் அமைந்துளது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்றதிகாரங்களிலும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இலக்கண விதிகள் இந்நூலில் எளிய உரைநடையாகத் தொகுத்தும் வகுத்தும் விளக்கப் பெற்றுள்ளன. தொல்காப்பிய நூற்பொருளைக் கல்லூரி மாணவர்களும் பிறரும் சுருக்கமாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் துணை செய்வதாகும். அடக்க விலைக்கு வெளியிடப்பெறும் இப் புத்தகத்தை வாங்குவோர்க்கு நூற்றுக்கு இருபத்தைந்து வீதம் விலையிற் கழிவு தரப்பெறும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாரால்
வெளியிடப்பெற்றது
1958

500 பக்கங்கள்]

[கழிவு நீக்கி விலை ரூ. 4.

புத்தகம் கிடைக்குமிடம் :

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
2. பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1.
3. தென் இந்திய சைவ சித்தாந்த நூற்ப்திப்புக் கழகம், 1-140, பிராட்வே, சென்னை