பக்கம்:சைவ சமயம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 147

குச் சிறிதும் பயன்தராத விழாகக்ளையும் ஆரவாரங் களையும் ஒழித்து, அவற்றிற்குச் செலவாகும் பணத்தை ஏழைச் சைவ மக்களுக்கு உதவி, அவர்களைச் சிவநெறியில் வாழ்விக்க வழி செய்தல் வேண்டும். மக்களை வாழ்விக்கத்தகும் முறையில் 'சிவபிரான் தொழிற்சாலை’ போன்ற கடவுட் பெயர்களால் தொழிற்சாலைகளை நிறுவவேண்டும்.

இவை போன்ற முயற்சிகளில் மடங்கள் ஈடு பட்டால், சைவம் தழைத்தோங்க வழியுண்டு.

தமிழில் வழிபாடு

தமிழர் வரிப்பணத்தாலும் தமிழ் வேந்தர் முயற்சியாலும் உண்டாக்கப்பட்ட கோவில்களே இத் தமிழ்நாட்டில் இருப்பவை. இவற்றில் சைவத் திருமுறைகள் ஓதியே வழிபாடு செய்யப்பட்டு வந்தது. சிறந்த சிவத்தலங்களான திருமறைக் காடு வேதாரண்யம் எனவும், திருவெண்காடு * சுவேதாரண்யம் எனவும், திருமுது குன்றம் " விருத்தாசலம் எனவும் மாறிய கால்த்தில், தமி ழில் இருந்த வழிபாடு வடமொழியில் மாறிவிட்டது போலும் சுவாமி, அம்மன் பெயர்கள் எல்லாம் தமிழ் மக்களுக்குப் புரியாத அபீத குஜாம்பாள் முதலிய வடமொழிப் பெயர்களாக மாறிவிட்டன. இந்த அலங்கோல நிலை, கோவிலுக்குச் செல்லும் பொதுமக்களின் உள்ளத்தில் அழுந்திய பக்தி ஏற்படாது செய்துவிட்டது. வழிபட வரும் மக் களுக்குப் புரியாத மொழியில் அர்ச்சனை செய்யப் படுமாயின், அதனுல் வழிபடுவோர் உள்ளம் எவ் வாறு குழையும்? சைவம் சீரழிவதற்கும், கோவில் வழிபாடு குறைந்து வருவதற்கும் இது மிகச்சிறந்த காரணமாகும். அறநிலையப் பாதுகாப்பாளர்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/146&oldid=678288" இலிருந்து மீள்விக்கப்பட்டது