பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ஏ

சோழர்காலச் சைவ சமயம்

89.

90.

537 of 1922, A.R.E. 1923, p.107. கோச்சோழன் காலமுதல் தில்லை எவ்வாறு சைவ சமய்த்தின் உயிர்நாடித் தலமாக வளர்ந்து வந்தது என்பது முன்பு விளக்கப்பட்டது. தில்லைக்

கோயிலில் மட்டும் திருமுறைகள் அடக்கம் செய்யப்பட்டதிலிருந்து

91.

ஏனைய கோயில்கட்கு நடுநாயகமானது என்பதை நன்கறியலாம். எல்லாக் கோயில் கடவுளரும் நடுயாமப் பூசையின்போது தில்லையில் ஒடுக்கமாகின்றனர். ஆதலின் எல்லாக் கோயில்களிலும் இரவு 10மணிக்குள் அர்த்தயாமப் பூசை முடித்துவிடவேண்டும் என்பதும் சரியாகப் பத்து மணிக்கே தில்லையில் அர்த்தயாமப் பூசை தொடக்கப்பெறுதலும் தில்லையின் முதன்மையை வலியுறுத்தும் சான்றாகும். தமிழகத்துச் செங்குந்தருக்குள்-அவர்கள் எங்கு இருப்பினும் பந்தியில் தாம்பூலம் தரும்பொழுது, சிதம்பரத்தைச் சேர்ந்தவர்க்கு முதல் தாம்பூலம் கொடுக்கும் வழக்கமும் பிறவும் இங்குநினைவுகூர்தற்குரியன. Vide A.R.E. 1918, P 145; A.R.E. 1922, PP.116-7 for more information on Temple-Administration.