பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி இ 165

13. திருக்கோடிகா ஐந்நூற்றெண்மன்

திருமடம் 60 of 1930

14. திருவாரூர் நாலாயிரவன்-திருமடம் 477 of 1912

15. சதுர்வேதிமங்கலம் சோழன்வாசல் திறந்தான்

. மடம் 312of 1927–28

16. திருப்புறம்பியம் மடம் (தலைவர்

ஆண்டார் கடியாபரணர்) 353 of 1917

17. திருவாலங்காடு வண்ணார-மாதேவ

- ஆண்டான் - மடம் 93 of 1926 18. திருப்புகலூர் மடம் - (மருத்துவ -

. சாலையுடன்) 97 of 1928 19. கோட்டுர் மடம் (தலைவர்- திருமாளி -

கைப் பிச்சன்) 446 of 1912

20. திருவையாறு மடம்(தலைவர் - சதாசிவ - -

- பட்டாரர்) 121 of 1925

21. திருப்பாலைவனம் அன்பர்க்கடியார்-மடம் 350of1928-29

இவையன்றிச்சாய்க்காடு, திருவல்லம்,திருமுதுகுன்றம், கோயிற்காடு, கோமல், திருப்பாம்புரம், அச்சுதமங்கம், திருவிடைக்கழி முதலிய பல கோயில்களைச் சார்ந்து மடங்கள் இருந்தன."

கோமடம் : லகுலீச பாசுபதர் எனப்படும் காளாமுகர் குஜரத் நாட்டில் காரோகணத்தில் தங்கள் தலைமை - ஆசாரிய பீடத்தை உடையவர்கள். அவர்கள் ஏறத்தாழக் கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே தமிழகத்தில் இருந்து வந்தனர் என்பது முன்பே கூறப்பட்டது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் கொடும்பாளுர் அரசனான விக்ரம கேசரி தன் பெயராலும், தன் மனைவியர் இருவர் பெயராலும் கோயில்கள் மூன்று கட்டினான் ஒரு பெரிய மடத்தை வித்தியாராசி, தபோராசி என்ற சைவாசாரியார் மாணவரான மல்லிகார்ச்சுனருக்கு அளித்தான்; 11 கிராமங்களையும் தானமாக உதவினான். இவர்கள் மடம் இருந்த இடத்தில் சிதைந்த கன்னட மொழிக் கல்வெட்டுக்கள் காணப்படலால், இவர்கள் கன்னட நாட்டிலிருந்து வந்திருக்கலாம், அக்காலத்தில் கன்னட நாட்டில் இராஷ்டிரகூடர் ஆட்சியில் காளாமுகர் ஓரளவு செல்வாக்குப் பெற்றிருந்தார்கள்." . -