பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி 167

வீரசைவ மடம்: வீரசைவ மதம் திருமூலர் காலத்தில் இருந்தது என்பது 4-ஆம் அத்தியாயத்திற் கூறப்பட்டது. அம்மதம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இடையில் கல்யாணபுரத் தரசனான பிச்சலன் (1156 - 1170) அமைச்சரான பசவர் என்பவரால், புதுப்பிக்கப்பட்டது. வீரசைவம் சமணரைச் சைவராக்கவும், சைவர்க்குத் திட்டமான சமயநெறி வகுக்கவும், சைவர் ஒரு துறையில் வாழவும்பாடுபட்டது."சைவத்துறவிகள்'மாகேசுவரர் என்றாற்போல, வீர சைவத் துறவிகள் 'வீர'- மாகேசுவரர் எனப்பட்டனர்.

குடந்தையம் பதியில் கோதிலாப் பெரிய மடந்தனில் வாழ்வீரமயேச்சுரர் வாழியே

என்பது தக்க யாகப் பரணியில்' கூறப்பட்டுள்ளது. இந்நூலைப் பாடிய ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராசன் இவர்தம் காலத்தவர். ஆதலின் அவர் காலமாகிய 12-ஆம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் வீரசைவ மடம் ஒன்று இருந்தது என்பது தெரிகிறது. அது கட்டட அளவிற் பெரியதாயிருந்தது பற்றியோ, அல்லது பல கிளை மடங்கட்குத் தலைமை மடமாக இருந்தது பற்றியோ, ஒட்டக்கூத்தர் அதனைப் 'பெரிய மடம்' என்றார். - مو

கோளகிமடத்துச் சிவாசாரியார் : இந்த மடத்தைப் பற்றியும் இதன் ஆசாரியாரைப் பற்றியும் 7-ஆம் அத்தியாத்திற் கூறப்பட்டது. இம்மடத்தினர் பாசுபதம் - லகுலீச பாசுபதம் - காளாமுகம் என்னும் சைவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இப்பிரிவுகளைச் சேர்ந்த பிரமசாரிகளே கோளகிமடத்தில் வேதங்கள், ஆகமங்கள், தர்க்கம் முதலியன கற்றனர். மூன்று லட்சம் கிராமங்களின் வருவாயைக் கொண்டு ஏற்பட்ட மடமாதலின், அதிலிருந்து நூற்றுக் கணக்கான துறவிகள் படித்தனர். அவர்கள் காஷ்மீரம், காசி, வங்கம், கேரளம், கர்நாடகம் முதலிய பகுதிகளைச்சேர்ந்தவர்கள். அவர்கள் பின்னர்காசி, திரிபுராந்தகம், தமிழகம் முதலிய இடங்களிற் பர்வி மடங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றுள் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தென்னாட்டில் இருந்த மடங்கள் சில. அவற்றுள் இருந்த ஆசாரியர்கள். பல சந்தானங்களைச் சேர்ந்தவர்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பா சமுத்திரத்தை அடுத்த வாலீசுவரம் என்னும் ஊரில் இரண்டு சந்தான ஆசாரியர்கள் இருந்தனர். ஞானாமிர்த சந்தானத்தைச் சேர்ந்த புகலிப்பெருமாள் என்பவர்கோயிலில் திருஞானம் என்னும் நூலைப் பாடினார்." அதே சந்தானத்தைச் சேர்ந்த அகோர தேவர் உடன் இருந்தார்." கோளகி மடத்து - ஜீயர் சந்தானத்தைச் சேர்ந்த அகோர