பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ടൂ, 193

போதத்தைப் போலச் சித்தாந்தக் கருத்துக்களைக் கோவைப்படக் கூறாது, அவ்வப்போது ஆசிரியர்க்குத் தோன்றிய உணர்ச்சி அனுபவத்தைக் கூறும் 45 செய்யுட்களை யுடையது. ஆயின், இவ்வநுபவப்பாடல்கள், சமய சாத்திரங்கள் போலவே, கடவுள்-உயிர் - உலகம் என்னும் மூன்று பொருள்களின் இலக்கணத்தையும், பயன்களையும், பயன் அடையும் நெறிகளையும் விளக்குவனவாகும்.

கடவுள் நிலை

பரம்பொருள் சொல்லையும் மனத்தையும் கடந்து நிற்பது; இயற்கையாகவிேமலம் அற்றது:அறிதற்குஅரியது. ஆயினும், உயிர்கள் உய்யுமாறு கருணையாக விளங்குவது; அவ்வருள் காரணமாக அருவத்திலிருந்து உருவமாக வெளிப்படுவது. அது தானாகவே அவ்வுருவைக் கொள்ளும். அப்பரம் பொருள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் உயிர்கட்குக் கூட்டுவது; பாவனைக்கு அப்புாற்பட்டது; ஆன்ம அறிவால் அறியப்படாதது உயிர்களைப் பக்குவப்படுத்துவதற்காகக் கள்ளனைப்போல மறைந்து நின்று தியானம் - மந்திரம் - சைவ வேடம் இவற்றால் உயிர்களை நல்வழிப்படச் செய்வது; பக்குவம் முதிர்ந்தபோது குருவடிவில் வெளிப்பட்டு, தீட்சை செய்து, உண்மை ஞானத்தை உணர்த்துவது; உயிர்கள் செய்தவத்திற்குப் பயன் அளிப்பது; தன் தன்மை அருளி உயிர்களை வீடுபெறச்செய்வது."

உயிரின் இயல்பு.

உயிர்கள் பல. அவை பாச பந்தத்தால் கட்டுப்பட்டவை; முத்தி நிலையில் பாசம் என்னும் மலம் அற்று நிற்பவை. மெஞ்ஞான நிஷ்டை கூடிய மக்கள் பிறவிப்பெருங்கடல் நீந்தினவராவர். அவர்கள் ஞானக்கண்ணால் நோக்கும் இயல்பினர் கசிந்த உள்ளமுடையவர்; ஆதலின் கடவுளை உணரும் சக்தி பெற்றவராவர். முத்தி நிலையிற் சிவமாந்தன்மை பெற்றவராயினும் உயிர்கள் உயிர்களே." சிவமாந்தன்மை பெற வழி

மக்கள் மலம் நீங்கி நிற்றற்கு முயற்சி, சிவன்பால் மறவாத அன்புடைமை, சிவத்தைப் பற்றியே எண்ணியிருத்தல் என்பவை வழிகள் ஆகும். இவற்றால் உலகின்பாற்செல்லும் பற்றுச் சிவத்தின்பால் செல்லும்; வழிபாடு உறுதிப்படும்.அந்நிலையில் சிவம் குருவாக வந்து, சிவதீட்சை செய்து, சிவஞானம் சேர்க்கும். அதனால் திருவருட்சக்தி மனத்தின்கண்பொருந்தியிருக்கும்." .

சைவ - 13