பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி =s 67

விதவைகளுக்கு மறுமணம் செய்பவர்; புலால், குடி ஒழித்தவர்; இறந்தாரைப் புதைப்பவர் லிங்கத்தைப் போலக் குல்லாயைத் தைத்து அதனைத் தலையில் அணிபவரும் அவருட் சிலராவர்." -

சைவத்தின் 4 பிரிவுகள்

திருமூலர் காலத்துச் சைவம், (1) சுத்தசைவம், (2) அசுத்த சைவம், (3) மார்க்க சைவம், (4) கடுஞ் சுத்த சைவம் என நால்வகைப்பட்டது. இப் பிரிவு பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திரங்களில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. - :

(1) சுத்த சைவர் :- பதி, பசு, பாசம் என்பவற்றின் வேறுபாடுகளை உணர்ந்தவர்; சித் என்னும் அறிவை அசித் என்னும் அவித்தையால் கெடாமற் பார்ப்பவர்; தூய மாயையுடன் அசுத்த மாயையைக் கலக்க விடாதவர்; பதி நித்தியம், பரம் என்பதை உணர்ந்தவர்; வேதாந்தத்திலிருந்து தோன்றிய சித்தாந்தமே சுத்தசைவ சித்தாந்தம்." .

(2) அசுத்த சைவர் - காதில் குண்டலங்களை அணிவர்; உடம்பில் நீறு பூசுவர் ருத்திராட்ச மாலையை அணிவர் சரியை, கிரியை வழி நிற்பர் உபதேசம் பெற்று மந்திரங்களைச் செபித்துக்கொண்டிருப்பர்."

(3) மார்க்க சைவர் - காதில் குண்டலங்களை அணிவர்; உடம்பில் நீறு பூசுவர் புற வேடத்திற்கு மிகுந்த மதிப்புத் தாரார்; ஞானத்தையே சிறப்பாகக் கருதுவர்; வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தப் பாதையிற் சென்று ஜீவன் முக்தராவர்."

(4) கடுஞ்சுத்த சைவர் - என்பவர் சைவர்க்குரிய வெளி வேடங்களில் கவனம் செலுத்தார்; நேரே சிவமிடம் சென்று தங்கள் பாசத்தையும் பசுத்வத்தையும் ஒழித்துச் சிவஞானத்தை அடைவர். அவர்கள் சுத்த சைவர்க்குரிய சமயப்படிகளிற் செல்லார்; அவர்கள் 'நான், அவன் என்று வேறுபாடற்றவர்கள் சொல்லரிய தத்துவத்தை அடைந்து இந்திரியங்களை அடக்கியவர்கள். அவர்கள் பரசாயுச்யத்தை அடைந்தவர்கள்." கண்ணப்பர், சாக்கியர் போன்ற நாயன்மார்கள் பலர் இவ் வகுப்பைச் சேர்ந்தவராவ்ர். அவர்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் படிகளைக் கடந்தவர்கள்; புறவேடம் அற்றவர்கள். கடுஞ் சுத்த சைவம், சிஞான போதம் முதலிய பின்னூல்களில் கூறப்படாமை கவனிக்கத்தக்கது. கடுஞ்சுத்த சைவருடைய இலக்கணங்களைத் திருமூலர் கூறியிராவிடில், நாயன்மார் பலருடைய