பதி இயல். 97 அதாவது உயிர்களும்-சம்பு பட்சம்போலவே நவபேதங் களை அடையுமோ என்ற ஐயம் நின்பால் எழலாம். இந்த ஐயத்தையும் தெளிவிப்பேன். அணுக்களாகிய உயிரினத் தவர் தம் புண்ணிய விசேடத்தால் அயன், மால்' என்ற நிலைக்கு மேல் செல்லுதல் இல்லை என்பர் சிலர். அயன், மால்' என்பவரோடு உருத்திரனாகவும் உயிரினத்தவர் ஆதல் உண்டு என்பவர் வேறுசிலர். நவந்தரு பேதங்களிலும், உயிர்கள் நிற்றல் உண்டு என்பர் இன்னும் சிலர். இவர்கட்கு இடையில் ஒரு சாரார் நவந்தரு பேதங்கள் என்று சொல்லப் படுகின்ற அவை அனைத் தும் அணுபட்சமேயன்றி ஒன் றேனும் சம்பு பட்சம் அன்று என்பர். இறைவனது தடத்த நிலையும் அதுபற்றி வரும் மூவகைத் திருமேனி முதலியன வும் உளவென்றிரல் கூடாதா ய் முடியுமாதவில் இவர்கள் கூற்று பொருந்து மாறில்லை. இந்த இடத்தில் ஒரு முக்கியமான கருந்தை நீ நினை வில் கொள்ள வேண்டும். உயிர்கள் தம்முடைய தாழ்நிலை யினின்றும் படி முறையால் உயர் நிலை அடைந்து முடிவில் சிவமேயாய் நிற்கும்என்பது சைவ சிந்தாந்திகள் எல்லோர்க் கும் உடன்பாடாகும். எல்லாவற்றிற்கும் மேலான பரசிவ நிலையை அடைதற்குரிய உயிர் அச்சிவத்தின் தடத்த நிலைகளாகிய நவந்தரு பேதங்களிலும் நிற்கும் என்பத னால் வருவதொரு குற்றம் இன்று. ஆகவே, நவந்தரு : பேதங்கள் சம்பு பட்சத்திலும் உண்டு; அணு பட்சத்திலும் உண்டு என்பது உண்மையே யாகும். ஆயினும், தடத்த உலையில் அதிகாரம் அல்லது தலைமைப்பாடு என்பதுஅஃதாவது உலகத்தைச் செயற்படுத்தும் நிலை-மகேசுர னுக்கு :ேல் இல்லாமையால் அனுபட்ச பேதங்கள் மகேசுர னுக்குமேல் இல்லை என்று சொல்லப்படும். இந்த துணுக் கத்தை நீ உளங்கொள்ளல் வேண்டும். மேலும், இறைவன் உயிர்களோடு உடனாய் நின்று எல்லா வகையிலும் உதவுதல் அவனது தடத்த நிலையாத சை. ச. வி.-7
பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/133
தோற்றம்