பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篡器榜 - சைவ சமய விளக்கு முடியாது. அஃதிருப்பின் அம்முயற்சியால் இன்பம் கிடைக் கும். அதனால் வினை முதற் காரணம்; முயற்சி துணைக் காரணம் என்பதை அறிந்து தெளிக. இன்னும் ஒர் உண்மையையும் நீ ஈண்டு அறிதல் வேண்டும். சில சமயம் முதற் காரணம் உள்ள பொழுது, துணைக் காரணங்களில் சில குiையினும் காரியம் நிக்ழும், முதற் காரணம் இல்லாதபொழுது துணைக் காரணங்கள் எவ்வளவு அதிகமாக இருப்பினும் காரியம் நிகழாது. இந்த உண்மையை என் வாழ்க்கையிலேயே கண்டுள்ளேன். சில சமயங்களில் வயல்களில் உழுதல் முதலியன இன்றியும் விதை பயிரைத் தோற்றுவித்துப் பயன் தருதலைக் கண்டி ருப்பாய். இதற்குக் காரணம் என்ன? முன்பு செய்த உழவு, இட்ட எரு, பாய்ச்சிய நீர் இவற்றில் எஞ்சியிருந்த சிறு பகுதிகளே துணைக் காரணங்களாய் அமைந்துவிடுகின்றன. விதை இல்லையேல், எவ்வளவு எரு இட்டு நீர் பாய்ச்சினும் என்ன பயனைத் தரமுடியும்? இது போலவே, நன்மையைத் தரும் வினை இருப்பின் சிறு முயற்சியே பெரிய பயனைத் தந்துவிடும் என்பது அறியத்தக்கது. எனவே, வினையின் பயனைத் தோற்றுவித்தற்கு முயற்சி ஒரு முன்னிலையாய் அமைகின்றதேயன்றி விளையும் பயன் அனைத்திற்கும் முயற்சியே முக்கிய காரணம் அன்று என்பதை அறிவாயாக. முயற்சி திருவினை யாக்கும்’ என்ற வள்ளுவரின் வாக்கு வினை பயன் தரும் முறையைக் கூறியதேயன்றி வினை உண்டு என்னும் கொள் ை ைய மறுத்ததற்கன்று என்பதைத் தெளிக, - இன்னும் வண்ளுவர் பெருமான் முயற்சி திருவினை பாக்கும். முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்’ என்று சொல்லிய தோடன்றி, - தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்." என்றும், 17. குறள்-618