பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 சைவ சமய விளக்கு தெய்வத்தின் திருமுழுக்கிற்காக (அபிடேகத்திற்காக)தி: து ய நன்னீர் கொணரப்பெறுகின்றது. அதைக் கொண்டு இறைவன் நீராட்டப் பெறுகின்றான். நம்மணத்தில் அன்பை வளர்ப்பதற்கு அறிகுறியாகவே புறத்தே திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு திருமுழுக்கு செய்விக்கப்பெறுகின்றது. நீராடிய பின் ஒரளவு உள்ளத் தெளிவை எய்துகின்றோமல்லவா? அன்பைப் பெருக்கு மளவு நமக்கு உள்ளத் தெளிவு உண்டாகின்றது என்பதை நாம் உணர முடியும். பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் முதலியவைகளைச் சொரித்தும் அபிடேகம் செய்வது வழக்கம். இவை யாவும் உடலை வளர்ப்பதற்கு நல்லுணவு என்பதை நாம் அறிவோம். நல்லுணவு படைத்து உடலை, வளர்ப்பது போன்று நல்லெண்ணங்களை எண்ணி உள்ளத்தை வளர்க்க வேண்டும் என்பது கோட்பாடு. எண்ணத்திற்கேற்ப உள்ளத்தில் உயர்வும் தாழ்வும் ஏற்படு: கின்றது. இதனையறிந்த வள்ளுவப் பெருந்தகையும், உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்" என்று கூறிப்போந்தார். நல்லெண்ணத்தை வளர்ப்பதே ஆலய வழிபாட்டின் உயிராய நோக்கம் என்பதை அறிக. மூர்த்தியை முழுக்காட்டிய பிறகு அவரை ஆடை ஆபரணங் களாலும் மலர்களாலும் அலங்கரிக்கின்றோம். நம் உடல் வாழ்க்கையை நாம் எங்ங்ணம் ஒம்புகின்றோமோ அதே கோட்பாட்டைத் தெய்வத்தின்கண் காண அன்பர்கள் முயலுகின்றனர் என்பது கோட்பாடு. தெய்வத்திற்கு உணவும் உடையும் தேவையானவை அன்று என்பதை, நாம் அறிவோம். இவை எல்லாவற்றையும் கடந்த, நிலையில் இருப்பது பரம் பொருள். ஆனால் இவற்றை யெல்லாம் ஏற்று அங்கீகரித்து மகிழ்வுற்றிருக்கும் மூர்த்தி யாக சாதகன் தெய்வத்தைப் பற்றிக் கருதுகின்றான். 6. குறள்-586