பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றி நின்று, பாசத்தை அறியும் அறிவு பாச அறிவாகும் என்பது உளங்கொள்ளத் தகும். இங்ங்னம் பாசங்களையே தானாக மயங்கி அறிந்து வரும் உயிர் அறிவு முதிர முதிர கருவியும் பொருளுமாகிய அனைத்தும் சடப்பொருள் (அறிவில்லாத பொருள்) ஆகும் என்பதன்றிச் சித்துப் பொருள் (அறிவுடைப் பொருள்) ஆகாமையையும் அறியும். மேலும், தான் சித்துப் பொருள் என்பதையும் அறிந்து தன்னை அனைத்திலும் வேறாகவும் காணும். இங்ங்னம் காணுங்கால் கருவிகரணங்களுக்குத் தான் முதல்வனாதலை உணரும். இவ்வுணர்வு தன்னையே பதிப் பொருளாக மயங்கி அறியச் செய்யும். இந்த அறிவுதான் பசு அறிவு அல்லது பசுஞானம்' என்று வழங்கப்பெறும். உயிர் பாசத்துக்குட்பட்ட பசுவாதலால், பசுவிற்கு மேல் உள்ள பதிப்பொருளை அறியமாட்டாது, பசுவையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவாம்’ என்பது கருத்தில் இருத்தத் தகும். இதை இரண்டு கருத்துகளையும் நாவுக்கரசரின் திரு மொழியையும் துணையாகக் கொண்டு விளக்கலாம். மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லான்; ஒப்புடையன் அல்லன், ஒருவன் அல்லன்; ஒர்ஊரன் அல்லன், ஓர்உருவம் இல்லி, அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால், இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் இவன்இறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே." இறைவனின் சொரூப நிலையை விளக்கும் இத்திருத்தாண்ட 87. நாவுக், தேவா. 5.97.10