பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் இன்மையால், பருப்பொருளின் தன்மையும் உள்ளவாறு விளங்காது ஒன்று பிறிதொன்றாகவே தோன்றும். அதாவது, நிலையாத பொருள் நிலைத்த பொருள் போலவும், துன்பப் பொருள் இன்பப் பொருள் போலவும் மாறித் தோன்றும். இந்நிலை இருளில் இருக்கும் பொழுது ஒன்றையும் பார்க்க இயலாத ஒருவருக்கு விளக்கு வரும்பொழுது பருப்பொருள் கள் விளங்கும்; நுண்பொருள் விளங்காமலும், பொருள்களின் வடிவமும் வண்ணமும் உள்ளவாறு விளங்காமல் மாறித் தோன்றுதலும் ஆகிய நிலையைப் போன்றதாகும். இவ்வாறு பொருள்கள் மாறுபட்டுத் தோன்றுவதால் அங்கும் இருளினால் விளைவதன்றி விளக்கினால் விளைவதன்று என்பதை நாம் அறிவோம். விளக்கு பொருள்களை விளக்கவந்ததேயன்றி மறைக்க வந்ததன்று மறைப்பது எப்பொழுதும் இருளேயன்றி விளக்கு அன்று. அதுபோலவே சகல நிலையில் மெய்யுணர்வு தோன்றாமல் விபரீத உணர்வு தோன்றுவதும், மாயை கன்மங் களால் விளைவதன்று ஆணவத்தால் விளைவதேயாகும். ஆணவத்தின் சக்தி இவ்வாறு சகலநிலையில், விபரீத ஞானத்தை-மயக்க உணர்வை-உண்டாக்குதலால் அப்பொழுது அதன் சக்தி அதோ நியாமிகா சக்தி என்ற பெயராகும். அதோநியமிகை-கீழ்நோக்கிச் செலுத்துவது. மகத்தாகிய ஆன்மாக்களை அணுத் தன்மையாய்ச் செய்தல்பற்றி வந்த காரணப் பெயரே ஆணவம் என்பது; இது முன்னரும் குறிப்பிடப்பெற்றது, இந்நிலை அதற்கு மாயை கன்மங்களின் சார்பினால் வருதலின், இவ்வியல்பு ஆணவத்தின் தடத்த நிலை எனப்படும் இயல்பாகும். இதனால் மாயை கன்மங் களின் சொரூபம் விளக்கும் தன்மை என்பது தெளிவாகும். மாயையின் தன்மை விளக்குவதாயினும், ஆணவத்தின் மயக் குதல் தன்மைக்கு ஏதுவாதல் பற்றி மயக்கும் தன்னை யுடையதாகவும் கூறப்பெறும். -