பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) - 173 இகலிவரும் இவைஉணரின் இருவெளியாம் தன்மை எய்தும்வகை தன்செய்தி இலங்கும்" என்று அவர் குறிப்பதைக் காணலாம். (7) கன்மமும் (வினையும்) செயல்புரியத் தூண்டுவ தன்றித் தடுப்பதன்று. அதனால் செம்பின் களிம்புபோல் இயற்கையாகவே உயிர்களிடத்துப் பொருந்தியுள்ள ஆண வத்தை நீக்குவதற்கே இறைவன் மாயை கன்மங்களை உயிர்கட்குக் கூட்டுகின்றான் என்பது தெளிவாகும். எனவே, உடல் பொறி கரணங்களும் உலகமும் உயிர்களின் நன்மை கருதியே இறைவனால் அருளப்பெற்றனவாதலை அறிந்து தெளியலாம். இங்ங்னமாகவும் சிலர் உடம்பும் உலகமும் தமக்குத் தீங்கு பயப்பனவாகக் கருதி அவற்றைப் பகைப் பொருளாகக் கொண்டு வெறுப்பர். இது தவறு பெருந்தவறு. உடம்பு முதலியவை எந்த நலம் கருதித் தரப்பெற்றனவோ அந்த நலத்தை அறியாது அவற்றினையே பெரிதாக மதித்து அவற்றில் அழுந்துதல் குற்றமேயன்றி அவை அருளப் பெற்றதில் குற்றம் ஒன்றும் இல்லை. இவற்றால் அறியாமை மாயை கன்மங்களின் காரியமன்று வேறொன்றின் காரியமே என்பது புலனாவதால் வேறொன்று எனப்படும் அதுவே ஆணவமலம் என்பதைத் தெளியலாம். (8) மறைத்தல்-நீங்குதல்: இன்னும் ஆணவமலம் உயிர்களின் அறிவு இச்சை செயல் என்னும் ஆற்றல்களை அழித்தொழியாது மறைத்தே நிற்கும் என்பதை அறிதல் வேண்டும். அதனால் அந்த ஆணவ இருளை நீக்கக்கூடிய மாயை கன்மங்கள் சேருமாயின், அவ்விருள் நீங்க, முன்மறைத்து நின்ற அறிவு இச்சை செயல்கள் வெளிப்படும். இதனை மூன்று எடுத்துக்காட்டுகளால் தெளியலாம். 12. சிவப்பிரகாசம்-37