பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த சாத்திரங்கள் 7 இந்த அரிய நூலுக்கு மாதவச் சிவஞான யோகிகள் 'சிற்றுரை, பேருரை என இரண்டு உரைகள் செய்துள்ளனர். பேருரை (பாடியம்) என வழங்கப்பெறுகின்றது. இவ்வுரை களின்றி இந்நூற்பொருளை உணர்தல் இயலாது. மாபாடியத்துள் சித்தாந்தப் பொருள் பலவற்றையும் நுணுக்கமாக விளக்கி யிருக்கும் அருமைப்பாட்டைக் காணலாம். இவற்றைத் தெளி வாக உணர்வதற்குச் சிறந்த தமிழறிவும், ஓரளவு வடமொழி யறிவும், அளவை நூல் பயிற்சியும் இன்றியமையாதவை. (4) சிவஞான சித்தியார். இதனை அருளிச் செய்தவர் மெய்கண்டாரின் மாணாக்கர் அருணந்திதேவநாயனார் என்பவர். மெய்கண்டரரின் 49 மாணாக்கர்களுள் இவரே முதல்வராகத் திகழ்ந்தவர். அருள்நந்தி என்பது தீட்சாத் திருநாமம். இதற்கு முன் இவர் சகலாகம பண்டிதர் எனப் பெயர் பெற்றிருந்தவர். மெய்கண்ட தேவரைச் சிவபெருமானுட னும், இவரை நந்தி தேவருடனும் ஒப்பிட்டுப் போற்றுவர் சைவப் பெருமக்கள். இந்நூல் சிவஞான போதத்தை மிக விரித்துச் செய்யப் பெற்ற வழி நூலாகும். சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் இதுவே மிகப் பெரிய நூலாகும். இது பரபக்கம், சுபக்கம் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. இரண்டையும் இருவேறு நூல்கள் என்று கருதும் அளவுக்கு மிகப் பெரிய நூல். பரபக்கம் 30 திருவிருத்தங்களையும், ‘சுபக்கம் 323 திருவிருத்தங்களையும் கொண்டவை. எனவே இதனைச் சிவஞான பேர்தத்திற்குச் செய்யுளால் அமைந்த மாபாடியம் என்று கருதலாம். இதன் பரபக்கம் பிற 7. இராமாநுசர் பாதராயரின் பிரம்ம சூத்திரத்திற்கு வகுத்துள்ள யூரீ பாஷ்யம் ஈண்டு நினைத்தல் தகும்.