பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 - சைவசித்தாந்தம் ஒர் அறிமுகம் இங்ங்னம் பற்பல நூல்களில் சித்தாந்த உண்மைகள் விளக்கம் பெற்றிருந்தும் பலர் இவ்வுண்மையை உணராது உள்ளனர். இதற்குக் காரணம் என்ன? மலபரிபாகம் இன்மையே காரணமாகும் என்று கூறலாம். மலபரிபாகம் என்பது ஆணவமலம் தனது ஆற்றல் கெட்டு நீங்கும் நிலையை அடைதலாகும். அஃது ஏற்படுங்காலத்து சத்தி நிபாதமும், அதன்வழியாக சரியை முதலிய நலங்களும் நிகழும். அத்தவமுயற்சியால் இருவினையொப்பு உளதாகி உலகமயக்கம் நீங்கும். நீங்கவே சிவஞானம் கை கூடும். மலபரிபாகம், சத்தி நிபாதம், இருவினையொப்பு என்பன தாமே நிகழ்தல் இயற்கையாய் நிகழ்தல் போலத் தவமும் ஞானமும் ஒருவர்க்குத் தாமே நிகழ்வதில்லை. அது குருவரு ளால்தான் நிகழும். பரிகள் வாங்கச் சென்ற திருவாதவூரரை இறைவனே குருவாக வந்து திருப்பெருந்துறையில் ஆட் கொண்ட நிகழ்ச்சியையும், திரிசிரபுரத்தில் தாயுமான அடிகளை மூலன் மரபில் வந்த மெளனகுரு தம் அடியவராக ஏற்ற நிகழ்ச்சியையும் ஈண்டு நினைவு கூரலாம். - மலபரிபாகமும் சத்தி நிபாதமும் வந்த காலத்தில் தவத்தைச் செய்யத்தக்க நிலையும், ஞானத்தை உணரத்தக்க நிலையும் வாய்க்குமேயன்றித் தவமும் ஞானமும் தாமே வந்துவிடமாட்டா. இதனைச் சில உவமைகளால் தெளியலாம். நோய் உள்ளபோது நோயாளி பசியின்மையால் உணவை உட்கொள்ளும் தன்மையற்றவனாக உள்ளான். மருந்துகளால் நோய் நீங்கின பிறகு பசி உண்டாகின்றது. உணவை ஒருவர் ஆக்கி அளித்த பிறகு அவ்வுணவை உண்டே பசி தனிய வேண்டியவனாகின்றான் அந்நோயாளி. இளங்குழந்தைகட்குக்' குழவிப் பருவம் காரணமாகக் கல்விகற்கும் நிலை ஏற்படுவ தில்லை. குழவி வளர வளர அதன் விடுப்பூக்கத்தால் (lnstinct of Curiosity) கல்விகற்கும் நிலை வாய்க்கின்றது. கல்வி