பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

”سبق۔ 26 சைவசித்தாத்தம் - ஓர் அறிமுகம் கண்டு, அவருக்குச் சித்தாந்த ஞானம் உணர்த்தியவர். பின்னர் தில்லைக்கு வடமேற்கிலுள்ள திருக்களஞ்சேரியில் தங்கியிருந்து சிவபெருமானோடு இரண்டறக் கலந்தனர். இவர் ஞானநூல் போதித்தலேயன்றித் தாமாக அத்தகைய நூலொன் றும் இயற்றியதாகத் தெரியவில்லை. 8 மண்வாசகம் கடந்தார். இவர் மெய்கண்டதேவரின் மாணாக்கருள் ஒருவர். இவர் உண்மை விளக்கம் என்ற நூலை அருளிச் செய்தவர். இதனைத் தவிர இவரைப் பற்றி வேறு குறிப்பு ஒன்றும் தெரியவில்லை. (7, உமாபதி தேவ நாயனார். தில்லைப் பதியில் வாழ்ந்த திருவுடை அந்தணர் மரபினில் பிறந்து வளர்ந்து பொன்னம்பலருக்குப் பூசனை புரியும் பேறு பெற்றவர் உமாபதி தேவர். தில்லை மூவாயிரவருள் சிறப்பாக இவர் ஒருவரே சித்தாந்த ஞானத்தை உலகிற்கு விளக்கினவர் ஆவர். தில்லை நாவலந்தீவிற்குச் சுழுமுனை நாடி போன்றது. அதன்பிங்கலநாடி இமயம் நோக்கிச் செல்லும் இடைக்லநர்டி இலங்கைக்கு நேரே போகும். சுழுமுனை நாடியே நாடிகள் மூன்றினும் சிறந்து, ஐந்தெழுத்தும் நிலைபெறும் ஆதாரங்களை ஒருமைப் படுத்தி நிற்கும் சிறப்பு வாய்ந்தது. ஐந்தொழிலும் இயற்றுவதற்கு ஏதுவாகிய திரு நடனம் செய்யப்பெறும் ஒளி நிலையமாகத் தில்லை விளங்குவதால் அதனை எல்லாத் தலங்களிலும் உயர்ந்ததாகச் சைவ நூல்கள் கூறும். இறைவன் தனது சக்தியையே நிலைக்களமாகக் கொண்டு ஐந்தொழில் நடாத்துத லாலே தில்லை சிவபெருமான் நடஞ்செய்யும் ஞானாகாசமாகத் துதிக்கப்பெறும் இத்தில்லையின்கண் புலிக்கால் முனிவருக் கும் (வியாக்கிரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும், தனது துணைவி சிவகாமி அம்மைக்கும் சிவபெருமான் நடனக் காட்சி நல்கி வருவதாக ஐதிகம். - - -