பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபலப்தி

அஜாதன்



3.உரையால் அனுமானம் : நீதியால் முற்கன்ம பலன் நிகழ்வது.இப்போது இச்செய்தி ஆதியாக வரும் பயன் என்று அறிதல் (சிசிசுப 18) அனுமானம் விட்ட பொருளை ஆகமம் விளக்கும். அறிவியலிலும் இஃது இன்றியமையாத ஒன்று. பக்கங்கள் : அனுமானத்தின் மூன்று பக்கங் கள்.துணிபொருளுக்கு இடமாய் இருப்பது பக்கம். அதற்கு எடுத்துக் காட்டாய் இருப்பது சுபக்கம். பொருளில்லாத இடம் விபக்கம்.இவற்றுள் துணி பொருள் இருப்பது முன்னிரண்டு. இல்லாதது மூன்றாவது.

அனுபலப்தி -பொருள் விளங்காமை இன்மை பற்றிய அறிவு “இங்கே குடம் இல்லை என்று அறியும் பொழுது, இன்மை பார்க்கப் படுவதன்று. ஆகையால்,காட்சியளவைக்குவேறாக இன்மையை அளவையாகக் கொள்ள வேண்டும்” என்பார் பாட்டர்.குடம் இருக்கும்பொழுது,அதனைக் காண்பது போல,அது இல்லை என்பதும் பார்த் தறிவதேயாதலின்,அதனைக் காட்சியளவை யிலேயே அடக்கலாம் என்பது சைவசித் தாந்தாக் கொள்கை.இன்மையை நான்காக இந்திய மெய்யறிவியல் கொள்கிறது.மறைஞான சம்பந்த தேசிகர் அதனை ஐந்தாகக் கொள்வார்.

அனுபலப்தி ஏது - இன்மையறிவு பற்றிய ஏது. ஏதுக்கள் மூன்றில் ஒன்று.குளிர் இல்லாமை பணி இல்லாமையையும் பனி இன்மை குளிர் இல்லாமையையும் உணர்த்துபவை.இங்குப் பணி இன்மை காரணம் குளிர் இல்லாமை காரியம். பா. ஏது.

அனுவாதம்- இது ஒரு நியாயம்.முன் கூறியதைப் பிறிதொன்று கூறுவதற்காகப் பின்னும் எடுத்துக் கூறுதல் சிவஞானபோதம் நூற்பா 4 இல் 'ஆயினும்’ என்னும் சொல் இல்லை.இருப்பினும், வருவித்து அந்தக் கரணம் அவற்றில் ஒன்று அன்று ஆயினும் என்னும் ஒரு தொடர் வைத்துரைக்கப்பட்டது.அந்தக்கரணங்களாகிய அவற்றின் ஒன்று அன்றாயினும் என்றதனாலேயே ஆன்மா அவற்றின் ஒன்று அன்றாதலும் அனுவாதத்தால் இங்குப்பெறப்பட்டது. ஒன்று அன்று என்து முன்பு பெறப்படாதவிடத்து,ஒன்று ஆயினும் எனக் கூற இயலாது.ஆகவே,ஒன்றன்று ஆயினும் என்றதனாலேயே ஒன்று அன்று என்பது முன்னரே பெறப்பட்டது.

அனேகாந்த வாதம் -சமணமதம்.

அனேகாந்தவாதி - ஆருகதன்,சமணன். அனேகான்மவாதம்-ஆன்மா பலவுண்டு என்னுங் கொள்கை அனேகேசுர வாதம் - கடவுள் பலர் என்னும் கொள்கை. இக்கொள்கை உடையவர் அனேகேசுரவாதி.

அனைய - ஒத்தி

அஜாதத்துவம்-அநாதி ஆகையால் எல்லா வகையான பிறப்பும் அற்றிருத்தல்.

அஜாதன் -''பிறப்பிலி.

33