பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்னும் உயர்ந்த குளிக்கோளுடன் பகைவரைப் பொருது வீழ்த்தி வெற்றிதந்து மாய்ந்த தறுகண் மறவர்களையும் தாம் மேற்கொண்ட மனைவாழ்க்கை மாண்புடையதாகக் கற்பென்னுந் திண்மையுடையராய்த் தம் கொழுநனையே தெய்வமெனக் கொண்டு உடனுயிர் துறந்த பத்தினிப் பெண்டிரையும் தெய்வமாக்கி வழிபடும் வழிபாடுகள் உலகில் அறமும் அன்பும் நிலை பெறத் தம் இன்னுயிர்துறந்த ஆடவரது வீரத்தையும் பெண்டிரது கற்பின் திண்மையையும் மதித்து மக்களைத் தெய்வநிலைக்கு உயர்த்தும் திறத்தினவாகும்.

மேற்குறித்த வழிபாடுகள் தாமும் தம் சுற்றத்தாரும் தீமையின் நீங்கி நலம் பெறுதல் வேண்டும் என்னும் தன்னலவுணர்வில் தோன்றியன. மக்கள் அறிவு முதிர்ந்து நாகரிக நிலையையடைந்த பின்னர் உருவாகியதே மன்னுயிரனைத்தும் வாழ உலக முதல்வனாகிய இறைவனை மனமொழி மெய்களாற் போற்றும் முழுமுதற் கடவுள் வழிபாடாகும். உலகுயிர்களில் நீக்கமறக் கலந்து இயக்கி யருளும் முழுமுதற் பொருளாகிய கடவுள் ஒன்றேயெனவும் அது விருப்பு வெறுப்பின்றி எல்லா உயிர்கட்கும் அருள் நல்கும் இயல்பினதெனவும் உணர்ந்து உயிர்க்குயிராய் மன்னுயிர்களின் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளிய மெய்ப்பொருளைப் புறத்தே பல்வேறு திருவுருவமைத்துத் திமை நீங்கவும் நன்மை பெருகவும் மலர் தூவி வழிபடுதல் உலக நலங்குறித்த வழிபாடாகும். அச்சங்காரணமாக நிகழும் சிறுதெய்வ வழிபாடுகளில் சிற்றுயிர்களைப் பலியிட்டு ஊனையும் கள்ளையும் உணவாகப் படைத்தல் என்பது மக்கள் நாகரிகம் பெறாத காலத்தில் நிகழ்த்திய வழிபாட்டு முறையாகும். மக்கள் அறிவு முதிர்ந்து நாகரிகம் பெற்ற நிலையில் உலகிற்கு முழுமுதற் கடவுள் ஒன்றே என்னுந் தெளிவுபெற்று, வாழ்த்த வாயும் நினைக்க் நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்தருளிய அம் முதற் கடவுளை மலர் தூவித் தொழும் தூய வழிபாட்டினை மேற்கொள்வாராயினர். பிறவுயிருந் தம்முயிர் போற் பேணிப் பாதுகாக்குந் தூய வழிபாட்டினை மேற்கொள்வாராயினர். பிறவுயிருந் தம்முயிர்போற் பேணிப் பாதுகாக்குந் தூய நன்னெஞ்சின