பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


விருந்துண்டு எஞ்சியமிச்சில் பெருந்தகை நின்னோடுண்டலும் புரைவதென்றாங்கு அறம்புணையாகத் தேற்றிப் பிறங்குமலை மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது ஏமுறு வஞ்சினம் வாய்மையிற்றேற்றி அந்தீந்தெண்ணீர் குடித்தலின்” (குறிஞ்சிப் 199-210)

என வரும் இப்பகுதியில், தலைவன் தலைவி இருவரும் திருமணம் செய்து கொண்டு சுற்றத்தாரையும் விருந்தினரையும் பேணி மனையறம் நிகழ்த்தும் முறைமையும் இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தெய்வத்தை வாழ்த்தி வணங்கித் தெய்வத்தின் திரு முன்னர்த் தலைவிக்குச் சூளுறவு செய்து தண்ணீர் குடித்துத் தெளிவிக்கும் திறமும் நன்கு வற்புறுத்தப்பெற்றுள்ளமை காணலாம்.

களவு வெளிப்பட்டபிறகு தலைவியை மனஞ் செய்யாது தலைவன் பொருள் தேடப் பிரிந்த காலத்து 'இவள் ஆற்றாளாயினாள், இவளை யிழந்தேன்’ எனக் கவலையுற்ற தோழி தலைமகளை நோக்கிக் கூறுவதாக அமைந்தது,

“பெருந்தோள் நெகிழ அவ்வரி வாடச்

சிறுமெல்லாகம் பெரும்பசப்பூர இன்னேமாக எற்கண்டு நாணி நின்னொடு தெளித்தனராயினும் என்னது உம் அணங்கலோம்புமதி வாழிய நீயெனக் கணங்கெழு கடவுட் குயர்பலி து உய்ப் பரவினம் வருகஞ் சென்மோதோழி

அரும்பெறலாய் கவின்தொலையப் பிரிந்தாண்டுறைதல் வல்லியோரே” (நற்றிணை 358)

என வரும் நற்றிணைப் பாடலாகும். “பெரியதோள் நெகிழவும் வனப்புடைய கோலம் வாடவும் சிறிய மெல்லிய நின் மார்பகத்தே பசலைபடரவும் யாம் இங்ங்னம் தமது பிரிவால் வருந்தவும் என்னைக் கண்டு நாணமுற்று நின்னைப் பிரியேன்” என நின்னொடு சூளுறவு செய்து தெளிவித்தா