பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

263


பெறுதற்குரிய எளிமைத் தன்மைத்து அன்றாதலின் அதனைப் பெறலரும் பரிசில் என்றும் நக்கீரனார் குறித்த திறம் நினைந்து மகிழத்தக்கதாகும்.

கந்தழியைப் பெற்றான் ஒருவன் அதனைப் பெறாதான் ஒருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை வழிப்படுத்துக் கூறுவான் என்பது பற்றி நக்கீரனார் இத்திருமுரு காற்றுப்படையைப் பாடியுள்ளார் என்பர் நச்சினார்க்கினியர். “கந்தழியாவது ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; அது,

44 - s * - - -

சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்குஞ் சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பம் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த

தூய்மையதா மைதீ சுடர்”

என்பதாம். இதனை,

“உற்ற வாக்கையினுறுபொருள் நறுமலரெழுதரு

நாற்றம்போல்

பற்றலாவதோர் நிலையிலாப்பரம்பொருள்”

என அதனை உணர்ந்தோர் கூறிய வாற்றானுனர்க என நச்சினார்க்கினியர் கூறிய விளக்கம், இத்திருமுருகாற்றுப் படையும் திருவாசகம் முதலிய திருமுறைகளும் போற்றும் முழுமுதற் கடவுள் ஒன்றே யென்பதனை இனிது புலப்படுத்துதல் காணலாம்.

இறைவன் திருவடியே உயிர்களுக்கு வீடாயிருக்கும் என்பதனைத் "தென்னன் பெருந்துறையான், காட்டாதன வெல்லாம் காட்டிச் சிவம் காட்டித், தாட்டாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி” எனவரும் திருவாசகத் தொடரால் திருவாதவூரடிகள் தெளிவாக அறிவுறுத்தி யுள்ளார் என்பது நச்சினார்க்கினியரின் கருத்தாகும்.

முருகப் பெருமான் கடல் நடுவேசென்று வேற்படை யாலே வெட்டி வீழ்த்திய மாமரம் கீழ் நோக்கின பூங்