பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஏற்புடையதே. எனினும் “சரவணபவ” என்பதனோடு ‘நம’ என்னும் வனக்க மந்திரத்தையும் இயைத்துரைப்பின் எட்டெழுத்து மந்திரமாதலின்றி ஆறெழுத்து மந்திரமாதல் இல்லை என்பதும் கருதத்தக்கது. முருகபூசை செய்யும் படிமத்தானாகிய வேலன் பச்சிலைக் கொடியாலே நறுநாற்றத்தையுடைய சாதிக்காயை நடுவே இட்டு அழகினையுடையதாகிய தக்கோலம் என்னும் காயையும் கலந்து காட்டுமல்லிகையுடனே வெண்டாளியையும் கட்டின முடிமாலையையுடையனாய் நறிய சந்தனத்தைப்பூசி நிறம் விளங்கும் மார்பினையுடையனாய் கொடிய தொழிலையுடைய வலிய வில்லாற் கொல்லுதலைச் செய்த குறவர் நீண்ட மூங்கிலிலே இருந்து முற்றின தேனாற் செய்யப்பட்ட கள்ளின் தெளிவை மலையின்கண்னே சிறிய ஊரிலே இருக்கின்ற சுற்றத்தோடே உண்டு மகிழ்ந்து குறிஞ்சி நிலத்திற்குரிய தொண்டகமாகிய சிறுபறையினது தாளத்திற்குத் தக குரவைக் கூத்தினை ஆட சுனையிற் பூத்த பூவாற் செய்த வண்டுகள் மொய்க்கும் கண்ணியினையும், இதழாகப் பறித்துக் கட்டினமாலையினையும், சேர்த்துக் கட்டிய கூந்தலினையும், இலையைத் தலையிலேயுடைய கஞ்சங்குல்லையினையும், நறிய பூங்கொத்துக்களையும், வெண்கடம்பமரத்தின் வெள்ளிய பூங்கொத்துக்களை நடுவேவைத்துத் தொடுத்த அழகினையுடைய தழையை இடையிலே அசையும்படி உடுத்தி சாயலுடைமையால் மயிலைக் கண்டாற்போன்ற மகளிரொடு செந்நிறத்தினனாய், சிவந்த ஆடையினை உடுத்து அசோகின் தளிர் அசையும் காதினனாய் அரையிற் கச்சினைக் கட்டி, காலில் வீரக் கழலினை அணிந்து வெட்சிமாலையைத் தலையிற் சூடி, ஊதலை ஊதி, கொம்பைக் குறித்துச் சிறியவாகிய பலவாத்தியங்களை எழுப்பி, ஆட்டுக் கிடாயைப் பின்னிட்டு, மயில் மீதமர்ந்து குற்றமில்லாத கோழிக் கொடியை உயர்த்திப் பிடித்து நெடியோனாய் நின்று, தோளிலே துணியை அணிந்து யாழ் நரம்பு ஆரவாரித்தாலொத்த இனிய மிடற்றினையுடைய பாடும் மகளிரோடே குறிய புள்ளிகளை யுடையவாய் இடையிலே இறுகக் கட்டிய உதர பந்தத்தின் மேலே இயைக்கப்பட்டு, நிலமளவும் தொங்கும் துகிலினை யுடையனாய், மெல்லிய தோளினையுடைய மான்பினை