பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


றையல் மகளிர் ஈரணி புலர்த்தர வையை நினக்கு மடை வாய்த்தன்று’ (பரி. 11,74-87)

என்பது அப்பரிபாடற் பகுதியாகும்.

"மேகம் பெய்யும் பருவத்து மழைபெய்து முடித்தமையால் தனது கடுங்குரல் நீங்கப் பணிமிகுதலால் குளிரால் நடுங்குதலையுடைய முன்பனிப் பருவத்து, வெயில் கடுமையாகக் காயாத மழையின் கடைப் பகுதியாகிய மார்கழி மாதத்தில் சந்திரன் கலை முழுவதும் நிறைந்து மறுவுடன் விளங்கும் பூரனை நாளாகிய திருவாதிரை நாளின்கண் (பதி பசு பாசம் என்னும் முப்பொருளுண்மை யினையும்) விரித்துரைக்கும் நூல்களாகிய ஆகமங்களைக் கற்று வல்ல அந்தணர்கள் ஆதிரை முதல்வனாகிய சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கி நிகழ்த்த, முப்புரிநூலனிந்த வேதியர்கள் மக்கள் தானமாகத் தரும் பொன்னாலாகிய அணிகலங்களை ஏற்றுமகிழ, வளையலை யணிந்தகன்னிப் பெண்கள் இவ்வுலகம் வெயிலாலும் பணியாலும் வெதும்பாது மழையாற் குளிர்வதாகுக என உலகம் ஈன்ற அன்னையாகிய இறைவியை வேண்டி அம்பாவாடலாகிய நோன்பினை மேற்கொண்டு தவமுது மகளிர் அறிவுறுத்த நெறியிலே நின்று, பனிபெய்யும் விடியற் காலத்திலேயே பருமணலையுடைய வையையாற்று நீரிலே முழுகியெழுந்து, குளிர்ந்த வாடைக்காற்று வீசுதலால் வையையாற்றின் காைக்கண் வேதியர் வளர்த்த வேள்வித் தீயைப் பேணிய சிறப்புடனே தமது ஈரவுடையினையும் புலரும்படி செய்ய, அவ்வந்தனர் தம் வேள்விக் கண்ணே தரும் அவியுணவையே உனக்குரிய திருவமுதாயிற்று” என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்.

"மையோலை பிடித்த இளைய புலமையாளராகிய மாணவர்களது கல்விப் பயிற்சியாகிய விளையாட்டிற்கு மாறாக (எதிராக) விடியற்காலத்திலேயே துயிலெழுந்து காமக் குறிப்பில்லாத விளையாட்டினைச் செய்கின்ற ஆயத்தினராய கன்னி மகளிர் நீரின்கண் புலன்கள் அடக்கிச் செய்யுந் தவத்தினை முன்னைப் பிறப்புக்களில் அடுத்