பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


'காணாமரப நீயா நினைவ’ (பரிபாடல் 3) எனத் திருமாலைப் பரவிப்போற்றும் தொடரில் கடுவன் இளவெயினனார் புலப்படுத்தியுள்ளமை இங்கு நினைவு கூர்தற்குரியது.

கடவுளாகிய முழுமுதற் பொருள், மன்னுயிர்களின் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத நிலையினதாய் இப்பொருள் போன்று எவ்வகையாலும் புலப்படாது போயினும் தனது அருளே கண்ணாகக் கொண்டு காணும் மெய்யன்புடைய அடியார்கட்கு உள்ளத்தினுள்ளே அகலாது வெளிப்பட்டுத் தோன்றி இன்னருள் சுரக்கும் உள்பொருளேயாம் என்பதனை வற்புறுத்தும் முறையில் அமைந்தது, மணிமிடற்று எண்கையாய் எனவரும் தொடராகும். "இது திருமேனி கொண்டு நின்றாய் ஆயினும் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாய் என்றது” என இத்தொடர்ப்பொருளை விளக்குவர் நச்சினார்க்கினியர்.

"கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் ................. எண்கையாய்" என்னும் இக்கலித்தொகைத் தொடரையும், “காண்டற்கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய்” எனவும், "என் புந்திவட்டத் திடைப்புக்கு நின்றானையும் பொய்யென்பனோ" எனவும், “மாற்றமனங்கழிய நின்ற மறையோனே” எனவும் வரும் திருமுறைத் தொடர்களையும் அடியொற்றிய நிலையில் சத்து, அசத்து என்பவற்றை வரையறை செய்து உணர்த்துவது,

"உணருரு வசத்தெனின் உணராதின்மையின்

இருதிற னல்லது சிவசத்தாமென இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே”

எனவரும் சிவஞானபோத ஆறாஞ் சூத்திரமாகும்.

"உணர் உருஎனின் அசத்து - மேலைச்சூத்திரத்திற் கூறப்பட்ட தம்முணர்வின் தமியாகிய முழுமுதற்பொருள்) காட்சி, கருதல், உரை என்னும் அளவைகளால் அறியப்படும் இயல்பினது என்றால், அவ்வாறு நம்மால்