பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


முனிவர்களைக் குறிப்பன.

மிக்கதவத்தைச் செய்த பெருமக்கள் தமது உடம்பினை நிலத்தில் அழிய விடாமலே அவ்வுடம்போடு நெடுங்காலம் வாழ்ந்திருந்து தாம் செய்த தவப்பயனை நுகரும் சித்தர்களாகத் திகழ்ந்தனர். இச்செய்தி,

“தவஞ்செய்மாக்கள் தம்முடம்பு இடாது

அதன்பயம் எய்திய அளவை மான” (பொருந. 91, 92)

எனவரும் பொருநராற்றுப்படைத் தொடராற் புலனாகும்.

“மிக்க தவத்தைச் செய்கின்ற பெருமக்கள் தம்முடைய தவத்திற்கு உறுதுணையாகிய உடம்பினை நிலத்தில் இறக்கவிடாமல் அவ்வுடம்புடன் நெடுங்காலம் உயிர்வாழ்ந்திருந்து அத்தவத்தாற் பெறுதற்குரிய பயனைப் பெற்ற தன்மையை யொப்ப” என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும்.

வான்மீகியார் என்னும் புலவர்பெருமான் தவத்தின் சிறப்பினை யுணர்த்துவதாக அமைந்தது,

"பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தியற்றே எவயமும் தவமும் துக்கின் தவத்துக்கு ஐயவியனைத்தும் ஆற்றாது ஆகலின் கைவிட்டனரே காதலர் அதனால் விட்டோரை விடாள்திருவே விடாதோர் இவள் விடப்பட்டோரே” (புறம். 358)

எனவரும் புறநானூற்றுப் பாடலாகும். இது, மனையறம் துறவறம் என்னும் இருவகையறங்களுள் துறவறத்தின் சிறப்பினை விரித்து விளக்குவதாய் வீடுபேறடைதற்கு நிமித்தமாக விளங்குவது இருவகைப் பற்றுக்களையும் நீத்த துறவறமே என வற்புறுத்துகின்றது.

“சூரியனாற் சூழப்பட்ட பயன்நிரம்பிய இவ்வுலகம்