பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

507


சிறுமையுற்றேன் என்று வருந்திய பொழுது, “காமம் சார்பாகக் கடுந்துயருழந்தோர் இன்று நின்னளவினரல்லர்; முன்னும் எண்ணிறந்தோருளர். தன் தந்தையாகிய தசரதனது ஏவலாலே மனைவியொடும் வனத்திற் போய் அவளைப் பிரிதலால் கொடுந் துன்பத்தை அனுபவித்தவன் வேத முதல்வனாகிய நான்முகனைப் பெற்ற திருமால் என்பதனை உலகம் எல்லாம் அறியும். நீ அறிந்திலையோ? அது நெடு நாளாக வழங்கும் செய்தியன்றோ” என இவ்வாறு இராமாயணக் கதையினையும்; சூதாடி நாடிழந்து மனைவியைப் பிரிந்து வருந்திய நளன் கதையினையும் எடுத்துக் காட்டித் தேற்றுகிறார். இவ்விடத்து வேத முதல்வன் தந்தையாகிய இராமபிரானைக் காமம் சார்பாக வினையிற் கட்டுண்டு துன்புற்றவராகக் கவுந்தியடிகள் கூறும் குறிப்பு அவர் மொழிகளிற் புலனாதல் கானலாம்.

கோவலனுக்குக் கண்ணகி வாழையிலையில் அடிசில் படைத்த தோற்றத்தையும், கோவலன், வணிகர்க்கு வேதத்தில் கூறிய முறைப்படிப் பலியிடுதல் வாய் பூசுதல் முதலிய செய்த பின் உண்ணுந் தோற்றத்தினையும் கண்டு மகிழ்ந்த ஆயர்மகளிர், அவ்விருவரையும் முறையே ஆயர் பாடியில் அசோதை பெற்றெடுத்த காயாம்பூ நிறத்தவனாகிய கண்ணனாகவும், அவனைத் தொழுநையாற்றில் வருத்தமகற்றி மணந்து கொண்ட ஆயர் மகள் நப்பின்னையாகவும் ஐயுற்று வியந்து பாராட்டுகின்றார். இச்செய்தி,

“குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்

கமுத முண்க வடிகளிங்கென அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின் உரிய வெல்லா மொருமுறை கழித்தாங்கு ஆயர் பாடியினசோதைபெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல்லமு துண்ணும் நம்பி ஈங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத் தொழுனை யாற்றினுட்டுமணி வண்ணனை விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென ஐயையும் தவ்வையும் விம்மித மெய்திக் கண்கொளா நமக்கிவர் காட்சி யீங்கென