பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் . . .

541


‘மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்

ஆடிய குரவையிஃதாமென நோக்கியும்”

(மணி. க. 65-68)

எனவரும் தொடரில் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார்.

பசிய மூங்கிலும் வெண்பூக்களையுடைய கடம்பும் ஒருங்கே நின்றதோற்றமானது, பசுமைநிறம் வாய்ந்த திருமேனியையுடைய கண்ணபிரானும் வெள்ளை நிறம் வாய்ந்த திருமேனியையுடைய தமையனாகிய பலதேவரும் ஒருங்கு நின்ற தெய்வத்தோற்றத்தைப் புலப்படுத்துதலால் அதனைக் கைகூப்பி வணங்கியசெய்தி,

శశ

பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு வால்வி செறிந்த மராஅங் கண்டு நெடியோன் முன்னொடு நின்றனனாம் எனத் தொடிசேர் செங்கையிற் றொழுது நின்றேத்தியும்”

(மணி. க. 75-78)

எனவரும் தொடரிற் குறிக்கப்பெற்றது.

திருமால் இராமனாக அவதரித்தபொழுது, கடல் சூழிலங்கை வேந்தனாகிய இராவணனைப் பொருது அழித்தல் வேண்டிக் குரங்குகளைக் கொண்டு மலைகளால் கடலில் அணை கட்டியசெய்தி,

"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

அடலரு முந்நீர் அடைத்த ஞான்று குரங்கு கொணர்ந்தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை யரக்கர் வயிறுபுக்காங்கு” (மணி. க. 8-11)

என வரும் தொடரில் உவமையாக எடுத்தாளப் பெற்றுள்ளமை காணலாம். மன்மருங்கறுத்த மழுவாள் நெடியோன் (மணி. 32-25) என்பதனாற் பரசுராம் அவதாரம் குறிக்கப்பட்டது.