பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


களும் பிற்காலச் சான்றோராற் பாடப்பெற்றுப் பாயிரத்திறுதி யிற் சேர்க்கப்பட்டனவாகும்.

“மூலனுரை செய்த மூவாயிரந்தமிழ்

மூலனுரை செய்த முந்நூறு மந்திரம் மூலனுரை செய்த முப்பதுபதேசம் மூலனுரை செய்த மூன்றுமொன்றாமே" (திருமந்:3048)

என்ற பாடலை ஆதாரமாகக் கொண்டு திருமூலர் தமிழ் மூவாயிரமாகிய திரும்ந்திரத்தின் வேறாக முந்நூறுமந்திரம், முப்பது உபதேசம் என்ற இரண்டு நூல்களையும் இயற்றினார் எனவும் இவையிரண்டும் அவர் மூலனுடம்பிற் புகுவதற்கு முன் இயற்றப்பட்டனவென்றும் கூறுவாருமுளர். திருமூலர் திருமந்திரமாலையின் வேறாக இரண்டு நூல்களைச் செய்துள்ளதாகச் சேக்கிழாரடிகள் திருமூலநாயனார் புராணத்திற் குறிப்பிடவில்லை. மேற்குறித்த பாடலிற் குறிப்பிடப்பட்ட மூவாயிரந்தமிழ், முந்நூறுமந்திரம், முப்பது உபசேதம் என்னும் இம்மூன்றும் திருமந்திரமாலை யாகிய இந்நூலில் அமைந்துள்ள மூவகைப் பொருட் கூறுகளையே குறித்தன எனக் கருதவேண்டியுள்ளது. இக்கருத்தினை உறுதிப்படுத்தும் முறையில் இந்நூல் முதல் தந்திரத்தின் தொடக்கத்தில் உபதேசம்’ என்ற தலைப்பில் முப்பது திருப்பாடல்கள் அமைந்திருத்தல் காணலாம். இதுபோலவே 'முந்நூறுமந்திரம்’ என்பதும் இதன்கண் அமைந்த மற்றொரு பகுதியாய் அடங்கியிருத்தல் வேண்டும். மூவாயிரந்தமிழ் என்றது மூவாயிரந்தமிழ்ப் பாடல் தொகையைச் சுட்டி நின்றதாகும். மூவாயிரம் தமிழ்ப்பாடல்களையுடைய இந்நூல், முப்பது உபதேசமும் முந்நூறு மந்திரங்களும் உடையதாய்த் தந்திரம் மந்திரம் உபதேசம் எனப்படும் மூவகையுறுப்புக் களையும் பெற்று ஒப்பற்ற தமிழாகமமாகத் திகழ்கின்றது என்பதே இப் பாடலின் கருத்தாகும். திரு விசுவநாத பிள்ளையவர்கள் வெளியிட்ட திருமந்திரப் பதிப்பில், நான்காந் தந்திரத்தில் திருவம்பலச்சகரம் 89 பாடல்கள், வயிர விமந்திரம் 50 பாடல்கள், ஏரொளிச்சக்கரம் 36 பாடல்கள்,

வயிரவச்சக்கரம் 6 பாடல்கள், சாம்பவி மண்டலச் சக்கரம்