பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ரொழுக்கம் என்ற தலைப்பிலுள்ள பாடல்கள் வேதப் பொருளையுளங்கொண்டு கூறியனவாகும்.

அரசாட்சிமுறை, வானச் சிறப்பு, தானச் சிறப்பு, அறஞ்செய்வான்திறம், அறஞ்செயான்திறம், அன்புடைமை, கல்வி, கேள்வி, கல்லாமை, நடுவுநிலைமை, கள்ளுண்ணாமை ஆகிய தலைப்புக்களில் அமைந்த திருமந்திரப் பாடல்கள் உலகியலொழுக்கமாகத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய பொருளுரைகளை அகத்துட்கொண்டு, அப் பொருள்களை உலகியலின் உயிர்நிலையாய் நிலவும் மெய்ந்நெறியாகிய சைவ சித்தாந்தத்திற்குப் பொருந்தும் வண்ணம் விரித்துக் கூறும் நிலையில் அமைந்துள்ளன. இங்குத் திருமூலர் கூறும் கல்வியாவது சிவபரம்பொருளைச் சிந்திக்கும் நிலையிலமைந்த கல்வியே. கேள்வி யென்றது அவ்விறைவனது பொருள்சேர் புகழ்த்திறங்களைக் கேட்டுணரும் கேள்வியினை. இவ்வாறே நடுவு நிலைமை, அன்புடைமை முதலாக இத்தந்திரத்திலுள்ள সে 55 6া id அதிகாரப் பொருள்களையும் சிவநெறியில் ஒழுகுவோர்க் குரிய சிறப்பியல்பினவாக ஆசிரியர் கூறியுள்ளமை கருதத் தகுவதாகும்.

வேத சிவாகமங்களின் ஒன்றுபட்ட துணிபு சிவனே பரம்பொருள் என்று முன் பாயிரத்திற் கூறிய பொருளைச் சிறப்புமுறையில் பிரித்துரைப்பதாக அமைந்தது திருமந்திரத் தின் இரண்டாந் தந்திரமாகும். இஃது அகத்தியம் என்பது முதல் பெரியாரைத் துணைக்கோடல் என்பது ஈறாக இருபத்தைந்து தலைப்புக்களையுடையது. இறைவன் வேண்டுதல் வேண்டாமையிலானாயினும் நம்மைப்போன்ற எண்ணில்லா உயிர்கள் உய்திபெறுதற்பொருட்டுத் தனது இயல்பாகிய பேரருளால் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்து கொண்டு இருக்கிறான். அம்முதல்வன் செய்யும் ஐந் தொழில்களுட்படுவன உயிர்கள் எடுத்துள்ள உடம்பும், அதன் அகக்கரணங்களும் புறக்கரணங்களும் உயிர்கள் வாழ்தற்கு இடனாகிய புவனங்களும், உயிர்கள் நுகர்தற்குரிய நுகர் பொருள்களும் ஆகும். உடலும் உயிருமாகச்