பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பிறர் பொருளைத் திருடாதவனும், மதிக்கத்தக்க நற்பண்பு களை யுடையவனும், பிறவுயிர்க்கு நலஞ்செய்பவனும், மனமொழி மெய்கள் தீயவற்றிற் செல்லாது அடங்குத லுடையவனும், ஒருபக்கம் கோடாத நடுவு நிலைமை யுடையவனும், தன்பாலுள்ளவற்றை வறியோர்க்குப் பகுத்தளித்து உண்ணுபவனும், மனத்தின்கண் அழுக்கில்லாத வனும், கழிகாமம் ஆகிய குற்றங்கள் இல்லாதவனும் ஆகிய இயல்புடையவனே இயமம் என்னும் யோகவுறுப்பில் நிலைபெற்று ஒழுகுபவன் (திருமந்திரம் 554) என்பர் திருமூலர்.

தனக்குற்ற துன்பங்களைப் பொறுத்து, பிறவுயிர்க்குத் துன்பஞ் செய்யாமையாகிய தவமும், இறைவன் திருப்பெய ராகிய மந்திரத்தைச் செபித்தலும், என்றும் சிந்தையின் நிறைவாகிய மனமலர்ச்சியுடைமையும், மறுபிறப்பும் இருவினைப் பயனும் அதனையறிந்து உண்பிக்கும் இறைவனும் உண்டென்னும் உறுதிப்பாடும், வறியார்க்கு ஈதலும் சிவனை நினைந்து மேற்கொள்ளும் விரதமும் முடிந்த முடிவாகிய மெய்ந்நூற்பொருளைக் கேட்டுணர்தலும், சிவவேள்வியும், சிவபூசனையும், ஒளியுடைய பொருளைக் கூர்ந்துனரும் மெய்யுணர்வும் எனச் சொல்லப்பட்ட உயர்ச்சியுடைய இப்பத்துச் செயல்களையும் செய்யும் இயல்புடையோர், நன்றே புரிதலாகிய நியமத்தில் நிற்போர் ஆவர் (திருமந்திரம் 557) எனத் திருமந்திரம் கூறும்.

யோகத்திற்கு இன்றியமையாத இருக்கை "ஆதனம்’ எனப்படும். பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாசனம் எனச் சொல்லப்பட்ட ஏழும் உத்தம ஆசனமாகும். இவற்றுடன் தொன்மையுடைய பிற ஆசனங்களையும் கூட்டி எண்ண எட்டு எனவும் பத்து எனவும் அறுபத்து நான்கு எனவும் நூறு எனவும் பலவாகும் (திருமந்திரம் 563) என்பர் திருமூலர்.

பிராணாயாமமாவது உந்திக்கமலத்திலிருந்து எழும் இடகலை பிங்கலையாகிய இருவகை உயிர்ப்பினையும், தத்தம் இயக்கத்திலிருந்து தடுத்து நிறுத்துதல் ஆகும். மெய்ப்பொருளை நினைந்து பிராணாயாமம் செய்வோர் தம்மனத்தை அடக்க வல்லவர் ஆவர். பிராணாயாமப்